தகவல்கள்

இதை மட்டும் வீட்டில் இப்படி வைத்துப்பாருங்கள். உங்கள் வீடு கோவிலுக்கு இணையாக புனிதமாகிவிடும்.

Feb 15 2021 02:29:00 PM

பொதுவாக குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருப்பார். அந்த குமரனையே அழைத்து வரும் வாகனம் நமது மயில். இதன் மகத்துவத்தை அறிந்ததால் தான் நமது தேசியப்பறவையாக இது போற்றப்படுகிறது. அப்படிப்பட்ட மயிலின் இறகுகள் எவ்வளவு சக்தியை வழங்கக்கூடியது தெரியுமா?

mayil-iragu

மயில்களில் ஆண் மயில்களுக்கு தான் தோகை இருக்கும். அதன் ஒரு பகுதி தான் இந்த இறகு. பெரும்பாலும் இதனை அழகுக்காக வீடுகளில் வைத்து இருப்பார்கள். இது மிக சக்தி வாய்ந்த தெய்வீக பொருள். இதனை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால் மட்டுமே இதன் உண்மையான சக்தி வெளிப்படும்.

mayil-iragu

மயிலிறகுகள் எப்போதும் எதிர்மறை சக்திகளை நம்மிடம் அண்டவிடாது. இதை வைத்து இருப்பவர்களுக்கு நிச்சயமாக நல்ல பலன்களையே கொடுக்கும், குறிப்பாக தலைமை பொறுப்புகளை வழங்க வல்லது இது. தினமும்  வெளியில் செல்லும் முன்னர் இதனை பார்த்துவிட்டு செல்வது உங்கள் செயல்களில் வெற்றியை உண்டாக்கும்.

mayil-iragu

இதனை பூஜையறையில் வைத்து தினமும் வழிபட குழந்தைகளின் கல்வி திறன் அதிகரிக்கும். கெட்டதை நீக்கி கேட்டதையெல்லாம் வழங்கும் தன்மை கொண்டது. இந்த மயிலிறகு உங்கள் வீட்டில் இருப்பது முருகப்பெருமான் உங்களுடன் இருப்பதற்கு சமம்.