தத்வமஸி

மரணத்திற்கு பிறகு மறுபிறவி இருக்கும் என்று சொல்வது உண்மையா? அப்படி மறுபிறவி இருக்கும்பட்சத்தில் மீண்டும் இந்த உலகத்தில் பிறக்க எத்தனை நாட்கள் ஆகும்?

Jan 12 2022 09:37:00 AM

மறுபிறவி பற்றி நிறைய பேர் சொல்கிறார்கள். இந்த ஆத்மா நம் உடலை விட்டு பிரிந்துவிட்டால் மறுபிறவி எடுக்கும் என்று சிலரும், அப்படி எல்லாம் மறுபிறவி எடுக்க வாய்ப்பே இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் ஆன்மீக ரீதியாக இறந்த ஒரு நபருக்கு நிச்சயம் மறுஜென்மம், மறுபிறவி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

maru jenmam people think

ஒரு மனிதனின் உயிர் அவரின் உடலை விட்டு பிரிந்துவிட்டால் அந்த ஆத்மா இந்த பூமியிலேயே சுற்றிக்கொண்டே இருக்கும். அந்த ஆத்மாவிற்கு மீண்டும் மறுபிறவி கிடைக்கும் வரை அந்த ஆத்மா பூமியை விட்டு செல்லாது. ஒரு ஆத்மாவிற்கு மறுபிறவி கிடைக்க சில நாட்கள், மாதங்கள் சில நேரங்களில் பல வருடங்கள் கூட ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.

maru jenmam people think

நன்றாக வாழ்ந்து தன்னுடைய முதுமை காலம் வரை எல்லா நல்லது, கெட்டதையும் பார்த்துவிட்டு இயற்கையான முறையில் மரணத்தை அடையும் முதியவர்களுக்கு மறுஜென்மம் இருக்காது என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. தனக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் காலம் முடிவதற்குள் அகால மரணம் அடைபவர்கள் மீண்டும் ஒரு கருவில் சேர்ந்து மறுபிறவி எடுக்கும் வரை இறந்த அந்த ஆன்மா இந்த பூமியை சுற்றிக்கொண்டு தான் இருக்கும் என்று பல ஆன்மீக ஆர்வலர்களால் சொல்லப்பட்டுள்ளது.

maru jenmam people think