பொதுவாக மனிதர்கள் நிறைய பேர் கடன் வாங்கி தான் குடும்பத்தை நடத்தி வருகிறார்கள். கடன் எதற்காக வாங்குகிறோம்? மூன்று வேலை உண்ண உணவு நன்றாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, நம் பிள்ளைகள் நல்ல சாப்பாடு சாப்பிடவேண்டும் என்பதற்காக கடன் வாங்குகிறோம். உங்கள் வீட்டில் பஞ்சம் நீங்க, செல்வ செழிப்பு பெருக சமயலறையில் சமைப்பதற்கு முன்பு என்ன செய்யவேண்டும் என்று இங்கு பாப்போம்.
பொதுவாக நிறைய பெண்கள் காலை எழுந்தவுடன் நேரடியாக சமயலறைக்கு சென்று சமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். சமையலறை என்பது என்ன? அன்னலட்சுமி குடி கொண்டுள்ள இடம். அப்பேற்பட்ட மஹாலக்ஷ்மி குடி கொண்டுள்ள இடத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். காலை எழுந்த வுடன் குளித்து முடித்து விட்டு தான் கிச்சனுக்குள் செல்லவேண்டும். அடுப்பை பற்ற வைப்பதற்கு முன்பு மூன்று அரிசி எடுத்துக்கொள்ளுங்கள்.
அந்த 3 அரிசியை தொட்டு வணங்க வேண்டும். அதன் பின்னர் "அருட்பெரும் ஜோதி, அருட் பெரும் ஜோதி, தனி பெரும் கருணை அருட் பெரும் ஜோதி" என்ற மந்திரத்தை சொல்லவேண்டும். அதன் பின்னர் நீங்கள் அந்த அரிசியை நீங்கள் சமையல் செய்யும் அரிசியில் போட்டு விடலாம். இப்படி நீங்கள் தினமும் செய்து வந்தால் உங்கள் வீட்டில் பஞ்சமே இருக்காது. பெண்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். நீங்கள் செய்யும் தொழிலிலும் உங்கள் சாப்பாட்டிலும் குறையே இல்லாமல் வாழ்கை நிறைவாய் அமையும் என்பது ஐதீகம். இதை கடைப்பிடித்தவர்கள் தற்போது வாழ்க்கையில் நிம்மதியாக உள்ளார்கள்.