ஆன்மீகம்

கோவில்களில் கல்திரைகள் அமைக்கப்பட்டது ஏன்? மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த அதிசயம்! முன்னாள் முதல்வர் MGR படித்து வியந்த சம்பவம்!

Feb 16 2021 02:33:00 PM

இந்துக்களின் பழைமையான கோவில்களில் கல்திரைகள் அமைக்கப்பட்டிருக்கும். அவை ஏன் அமைக்கப்பட்டன? அவற்றுக்கு பின்னால் உள்ள வரலாற்றுக் காரணம் என்ன என்று இங்கு பார்க்கலாம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த அதிசய நிகழ்வு பற்றி இங்கே காணலாம்.

madurai meenakshi amman temple mgr

பல ஆண்டுகளுக்கு முன்னாள் மாலிக்கபூர் மதுரையை நோக்கி படை எடுத்து வந்தார். அவர் வரும் இடங்கள் எல்லாம் கொ லை, கொ ள் ளை, க ற் ப ழி ப் பு, அந்த நகரில் உள்ள கோவிலை இடிப்பது, அப்படி முடியவில்லை என்றால் கூட அந்த கோவிலில் உள்ள கர்ப கிரக மூர்த்தியை சூ றை யா டு வ து போன்ற தீ ய வேலைகளை செய்துவந்தார்.

madurai meenakshi amman temple mgr

அப்போது அனைத்து ஊர்களிலும் இருந்த மக்கள் கல்திரைகளை ஏற்படுத்தி தங்கள் கோவில் மூர்த்திகளை பாதுகாத்து வந்தனர். இந்த செய்தியை மதுரை கோவிலில் இருந்த 5 சிவனாச்சாரிகள் அறிந்தனர். நாமும் அதை போன்று கல்திரை ஏற்படுத்தவேண்டும் என்று கடைசியாக ஒரு முறை கர்ப கிரக மூர்த்திக்கு பூஜை செய்து அபிஷேகம் செய்து கற்பகிரக மூர்த்திக்கு வெளியே கல்திரையை எழுப்பினர். அப்போது அந்த கல்திரைக்கு வெளியே போ லி யா ன சிவலிங்கம், அம்மாள் மூர்த்திகளை எழுப்பி அவற்றுக்கு போ லி யா ன நகை, அணிகலன்கள் அனுவித்து பூஜை செய்தனர். மாலிக்கபூர் மதுரை வந்தார். மதுரையை சூ றை யா டி னா ர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் புகுந்து மீனாட்சி அம்மன் மூர்த்தியை சூ றை யா டி ச் சென்றார்.

madurai meenakshi amman temple mgr

அதன் பின்னர் 48 ஆண்டுகள் கோவில் மூடியே இருந்தது. விஜயநகர மன்னர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்கள் முகலாயர்களை அடித்து விரட்டினர். நாடுமுழுவதும் உள்ள கோவில்களை மீண்டும் சீரமைக்க தொடங்கினர். அப்போது அவர்கள் மதுரை மீனாட்சி அம்மனையும் சீரமைக்கும் வேளைகளில் ஈடுபட்டனர். மீனாட்சி அம்மன் சிலையை மாலிக்கபூர் சூ றை யா டி ய தால் புதிதாக சிலை செய்யலாம் என்று யோசித்தனர். அப்போது அந்த 5 சிவனாச்சாரிகளில் 4 பேர் இ ற ந் து விட்டனர். ஒருவர் மட்டும் உ யி ரு டன் இருந்தார். அவர் மீனாட்சி அம்மன் கோவில் புனரமைக்கும் பணி ஆரம்பிப்பதை அறிந்து ஆலயத்தை அடைந்தார்.

madurai meenakshi amman temple mgr

அங்கே சென்று மீனாட்சி அம்மன் சிலையை மீண்டும் செய்ய வேண்டாம். அந்த சிலை மிகவும் பத்திரமாக உள்ளது என்று நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினார். அப்போது அவர்கள் அங்கே இருந்த கல்திரையை இடித்துவிட்டு பார்த்தனர். அங்கே 48 வருடங்களுக்கு முன்பு எறிந்த விளக்கு பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது. அம்மன் துளி கூட அழகு குறையாமல் அனைத்து நகைகளுடனும் பிரகாசமாக இருந்தார். அம்மனுக்கு வைத்த பூ அப்படியே வாடாமல் இருந்தது. இதைப்பார்த்த அனைவரும் மெய் சிலிர்த்து போய்விட்டனர். பின்னர் அப்படியே அந்த கர்பகிரகத்தில் இருந்த அம்மனை வழிபட தொடங்கினர். மதுரை நகர் முழுவதும் இந்த செய்தி அறிந்து அனைவரும் விசேஷம் போல கொண்டாடினர்.

madurai meenakshi amman temple mgr

madurai meenakshi amman temple mgr

ஒரு முறை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். கோவில் நூலகத்தில் இருந்த இந்த கல்வெட்டைப்பார்த்தார். இதை பார்த்து அவரும் அதிசயித்து போய்விட்டார். இப்பேர்ப்பட்ட செய்தியை இங்கே ஏன் வைக்கிறீர்கள்? இதை அனைவரும் அறிந்து கொள்ளும்படி கோவிலின் வெளிப்புறம் மக்கள் படிக்கும்படி வையுங்கள் என்று உத்தரவிட்டார். இதனால் தான் அந்த காலங்களில் கோவில் கற்பகிரகங்களுக்கு முன்பு கல்திரைகள் அமைக்கப்பட்டன என்று வரலாறு கூறுகிறது.

madurai meenakshi amman temple mgr