தெய்வீகம்

#WoW: கடவுளின் ஓசை கூட கேட்கும்! இதை கொஞ்சம் முயற்சித்து தான் பாருங்களேன்!

Mar 14 2020 09:23:00 AM

அளவுக்கு அதிகமான கோபம், எரிச்சல் உங்களுக்கு வந்தால் அதை தவிர்க்க அருமையான ஒரு பரிகாரத்தை சொல்றேன். மனதை பக்குவப்படுத்துவதில் சிவ நாமத்திற்கு மிஞ்சியது வேற எதுவுமே இல்லை. அனைத்து சித்தர்களும் சிவபக்தர்களாக இருப்பதன் காரணம், அதனால் தான்.

lord shiva om-namashivaya

பூஜை அறையில் போய் சிவன் படம் முன்பாகவோ அல்லது சிவலிங்கத்தின் முன்பாகவோ அமர்ந்து கொள்ளுங்கள். கையில் ருத்ராக்ஷ மாலை அல்லது ஸ்படிக மாலையை வைத்துக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டு, தொடர்ந்து 108 முறை ஓம்நமசிவாய சொல்லுங்கள். 108 முறை ஓம்நமசிவாய சொல்ல அதிகபட்சம் 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

lord shiva om-namashivaya

108 முறை ஓம்நமசிவாய சொன்ன பின்னர் கண்களை திறந்து பூஜை ரூமில் இருக்கும் சிவன் படம், சிவலிங்கம் மற்றும் விளக்கு ஜோதி ஆகியவற்றை கண்களை திறந்து பார்த்தால், அதன்பின்னர் உங்கள் மனம் சாந்தி அடைவதை நீங்கள் உணரலாம். அவ்வாறு சொன்ன பின்னர் கட்டுக்கடங்காத உங்கள் கோபம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இதை செய்வதன் மூலம் சிலருக்கு கடவுளின் ஓசை கூட கேட்கும். கொஞ்சம் முயற்சித்து தான் பாருங்களேன்.