தெய்வீகம்

கண்ணால் பார்த்தாலே கோடி புண்ணியம்! முருகப் பெருமானே பூஜித்த பஞ்ச லிங்கங்கள்! திருச்செந்தூர் கோவிலுக்குள் இப்படியொரு இடம் இருக்கிறதா?

Sep 27 2021 12:43:00 PM

இதுவரையில் ஐந்து தடவை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு போயிருக்கிறேன். ஆனால் கோவிலின் உள்ளே இப்படியொரு பகுதி இருப்பது, இதுவரையில் எனக்குத் தெரியாது. பலருக்கும் இதைப்பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். லோக்கல் ஆட்களே சட்டென தகவல் சொல்ல திணறாங்க. கோவில் பூஜை செய்யும் குருக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கே கொஞ்சம் தெரிந்திருக்கிறது. வழக்கமா சிவபெருமானுக்கு மனிதர்களால் மட்டுமே ஆதாரனை நடைபெறும். ஆனால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் முருகப்பெருமானே பூஜித்த பஞ்சலிங்க சிலைகள் உள்ளது.

temple tiruchendur panchalingam

மூலவருக்கு பின்புறம் பஞ்ச லிங்கங்கள் அமைந்துள்ள சன்னதி உள்ளது. சன்னதியை அடைய கருவறைக்கு அருகில் உள்ள நுழைவாயிலின் வழியாக செல்ல வேண்டும். ரொம்ப குறுகலான பாதையாக இருக்கும். பக்தர்கள் இந்த லிங்க தரிசனம் பெற்றது குறித்து கேள்விப்பட்டதே இல்லை. இங்குள்ள பஞ்சலிங்கங்கள் முருகப்பெருமானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்டவை. இன்றும், இந்த லிங்கங்களுக்கு குருக்கள் பூஜை செய்வது கிடையாது. தேவர்கள் இவ்விடம் வந்து பூஜை செய்வதாக நம்பிக்கை நிலவுகிறது.

temple tiruchendur panchalingam

திருச்செந்தூர் கடற்கரையில் சூரபத்மனை அழித்த போது, முருகப்பெருமானுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடிக்கிறது. அப்போது அகத்தியர்  வழிகாட்டுதலின் கீழ், பஞ்ச லிங்கங்களை மணலிலே பிடித்து வழிபாடு செய்து தோஷங்கள் நீங்க பெறுகிறார். இந்த அபூர்வமான வழிபாட்டிற்கு பார்த்திபலிங்க பூஜை என்று பெயர். இந்த கலியுகத்தில் மணலில் சிவலிங்கம் செய்து வழிபடுவது தான் உயர்ந்த வழிபாடு என சிவபெருமானே பார்வதி தேவிக்கு உபதேசித்ததாக புராணங்கள் மூலம் தெரிய வருகிறது. 

temple tiruchendur panchalingam

இந்த வழிபாட்டை செய்ய முயற்பட்டு, இலங்கை திருகோணமலையில் மணலில் 1,008 சிவலிங்கங்கள் செய்து, இலங்கை வேந்தன் ராவனேஸ்வரன் அந்நாட்டை சிவ பூமியாக மாற்றினான். இதற்கான குறிப்புகள் பழமையான ராவண சம்கிதை, ராவண கட்கம், குமார தந்திரம் போன்ற கிரந்த நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. காண கிடைக்காத அற்புத காட்சி, இப்போது அனைவருக்கும் கிடைத்துள்ளது. சகல பாவங்களும் தொலைந்து, பரமேஸ்வர பெருமானின் பேரருளினால், அனைத்து வல்லமைகளும் கிடைக்கட்டும்.