தத்வமஸி

இந்த அறிகுறி எல்லாம் உங்க கண்ணில் பட்டால் உங்களுக்கு பணவரவு வரப்போகுது என்று அர்த்தம்!

Nov 20 2021 04:05:00 PM

சிலர் எப்போ பாத்தாலும் எனக்கு நேரமே சரி இல்லை, என்ன பண்றதுன்னே தெரியல என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள். அவங்க கண்ணு முன்னாடி அதிர்ஷ்டம் வந்து சென்றாலும் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். ஆன்மீக முறைப்படி நமக்கு வரும் சில கனவுகளும், நம் கண் முன் நடக்கும் சில விஷயங்களும் நமக்கு அதிஷ்டத்தை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

life athisayam happens

காலையில் எழுந்தவுடன் நம் கண்களில் பால், தயிர் போன்ற பொருட்கள் பட்டால் அன்று நமக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்று அர்த்தம். கனவில் தங்கநிறத்தில் பாம்பு அல்லது வெள்ளை நிறத்தில் பாம்பு வந்தால் நமக்கு பணவரவு இருக்கும் என்று அர்த்தம். மழையும், வெயிலும் ஒரே நேரத்தில் நடக்கும் சம்பவம் நிகழ்ந்தால் அந்த நேரத்தில் யாரிடமாவது பணம் வாங்கச் சென்றால் அந்த காரியம் கைகூடும்.

life athisayam happens

நம் வீட்டுக்கு பக்கத்தில் எங்காவது பசுமையான புல்லை பசுமாடு மேய்ந்துகொண்டிருப்பதை பார்த்தால் பணவரவு இருக்கும் என்று சொல்லபடுகிறது. எரிநட்சத்திரம் விழுவதை பார்ப்பவர்களுக்கு பணவரவு இருக்கும் என்று சொல்கிறார்கள். நாம் ஒரு காரியமாக வெளியே செல்லம்போது திருமணமான பெண்ணை எதிரில் பார்க்க நேர்ந்தால் நல்ல நேரம் ஆரம்பிக்கப்போகிறது என்று அர்த்தம்.

life athisayam happens

நாம் ஒரு வேலையாக வெளியே செல்லும்போது நம்ம வீட்டிற்குள் வவ்வால் நுழைந்தால் அதிஷ்டம் ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். மழை காலங்களில் வெட்டுக்கிளி, தவளை போன்ற உயிரினங்கள் நம் வீட்டிற்குள் நுழைந்தால் நம்ம வீட்டுக்கு அதிர்ஷ்டம் என்று அர்த்தம். நம்ம ஒரு வேலையா வெளியே போகும்போது நம் ஆடைகளில் பறவைகள் எச்சம் பட்டால் நமக்கு போகும் காரியம் கைகூடும் என்று அர்த்தம். சட்டையை நாம் தெரியாமல் திருப்பிப்போடும் நிலை ஏற்பட்டால் அதுவும் ஒருவகை அதிஷ்டம் என்று சொல்லப்படுகிறது.

life athisayam happens