தத்வமஸி

லட்சுமி தேவி நமது வீட்டில் குடியேற நாம் என்ன செய்ய வேண்டும்?

Nov 20 2021 02:54:00 PM

சில வீட்டுக்கு சென்றால் இந்த வீடு இவ்வளவு லட்சுமி கடாட்சத்துடன் இருக்குதே என்று நாம் பார்க்கும்போதே தோன்றும். சில வீடுகளில் எப்பவும் பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும். நம்ம வீட்டில் லட்சுமி தேவியை கொண்டுவருவதற்கு நாம் சில வழிவகைகள் செய்தால் எல்லா பிரச்சனைகளும் நீங்கி வீடு லட்சுமி கடாட்சத்துடன் இருக்கும்.

lakshmi kadchcham home

பெண்கள் தங்களின் சில வாழ்க்கை பழக்கங்களை மாற்றினால் வீட்டில் லட்சுமி கடாச்சம் எப்பவும் நிலைத்திருக்கும். வீட்டில் உள்ள பெண்கள் எப்பவும் சோம்பேறித்தனமாக இருக்கக்கூடாது. காலை 6 மணி அதேபோல மாலை 6 மணிக்கு என ரெண்டு நேரமும் வீட்டில் விளக்கு ஏற்றிவைக்க வேண்டும். கடன் வாங்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

lakshmi kadchcham home

பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் துணி துவைக்கக்கூடாது. மாலை 6 மணிக்கு மேல் தலையை விரித்துகொண்டு தலை வாரக்கூடாது. மாலை நேரங்களில் நம் வீட்டின் வாசற்படியில் உட்கார்ந்து பக்கத்து வீட்டு காரர்களுடன் பேசக்கூடாது. அளவோடு ஆசைப்படுவது நல்லது. வீட்டில் உள்ள ஆண்களும், பெண்களும் அதிகம் கோவப்படாமல் சண்டை போடாமல் இருக்க வேண்டும்.

lakshmi kadchcham home