ஆன்மீகம்

முத்துக்களை குவியலாக வைத்து வழிபட்ட மன்னர்கள்! குலசேகரப்பட்டினத்தில் எட்டு அம்மன் ஆலயங்கள் அமைந்துள்ள அற்புதம்!

Jan 06 2022 03:07:00 PM

இந்தியாவில் மைசூர் மாநகரில் தசரா பண்டிகை மிக விமர்சையாக கொண்டாடப்படும். மைசூருக்கு அடுத்த படியாக நம்ம தமிழ்நாட்டில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் ஆலயத்தில் தசரா பண்டிகை மிகவும் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. பாண்டிய நாட்டு மன்னரான குலசேக பாண்டியருக்கு அம்மன் காட்சி அளித்ததால் இந்த ஊர் குலசேகரப்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது.

kulasekara pattinam muthu maari amman

சங்ககாலத்தில் இந்த ஊர் தென்மறைக்காடு என்று அழைக்கப்பட்டது. பாண்டிய மன்னர்கள் இந்த இடத்தில் துறைமுகம் அமைத்து அரபு நாடுகளுக்கு சென்று அங்கிருந்து குதிரைகளை வாங்கி வந்தனர். பாண்டிய நாட்டு மன்னர்கள் முத்துக்களை குவியலாக வைத்து வணங்கி வந்ததாலும், அந்த முத்துக்களின் குவியலில் இருந்து அம்மன் உருவானதால் குலசேகரப்பட்டினத்தில் உள்ள அம்மன் முத்தாரம்மன் என்று அழைக்கப்படுகிறார்.

kulasekara pattinam muthu maari amman

குலசேகரப்பட்டினம் என்றாலே அங்கு முத்தாரம்மன் கோவில் மட்டும் தான் உள்ளது என எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் இங்கு மொத்தம் 8 அம்மன் ஆலயங்கள் அமைந்துள்ளன. வீரகாளியம்மன், பத்திரகாளியம்மன், முப்பிடாரி அம்மன், கருங்காளியம்மன், முத்தாரம்மன், உச்சினிமாகாளியம்மன், மூன்றுமுகம் கொண்ட அம்மன், வண்டி மறித்த அம்மன் என மொத்தம் எட்டு அம்மன் ஆலயங்கள் குலசேகரப்பட்டினத்தில் அமைந்துள்ளன. காளி குணம் கொண்ட அம்மன் அருகருகே இருந்தால் அதை அஷ்டகாளிகள் என்று சொல்வார்கள்.

kulasekara pattinam muthu maari amman

இங்கு மொத்தம் 8 காளி அம்மன் ஆலயங்கள் உள்ளதால் இங்குள்ள அம்மன் கடவுளை அஷ்ட காளிகள் என்று அழைக்கிறார்கள். நம் உடலில் வெயில் காலத்தில் தோன்றும் முத்துக்களை அம்மை நோயை இந்த முத்தாரம்மன் உடனே குணப்படுத்துவாள். குழந்தை வரம், திருமண வரம், கல்வி, வணிகம், தொழிலில் முன்னேற்றம் வேண்டுபவர்கள் இங்குள்ள அம்மனை வழிபட்டு அம்மனின் அருளை பெற்று வருகிறார்கள். குலசேகரப்பட்டினம் சென்று எல்லா அம்மனையும் வழிபட்டால் நம் வாழ்க்கையில் நிம்மதி பொங்கும் என்று சொல்லப்படுகிறது.

kulasekara pattinam muthu maari amman