தகவல்கள்

நம் வீட்டில் குலதெய்வம் குடி கொண்டுள்ள இடம் எது தெரியுமா? தெரிந்தும் தெரியாமலும் இந்த தவறுகளை இனி திரும்ப செய்யாதீர்கள்.

Feb 22 2021 02:04:00 PM

நாம் சிறு குழந்தையாய் இருந்த போது வீட்டின் நிலைவாசல் கதவை வேகமாக திறந்தாலோ, தட்டினாலோ வீட்டில் உள்ள பெரியவர்கள் நம்மை அதட்டுவார்கள், அதற்காக நாம் திட்டும் வாங்கி இருப்போம். அதற்கு காரணம் என்ன தெரியுமா? நம் வீட்டில் உள்ள நிலைவாசலில் தான் நம்முடைய குலதெய்வம் குடிகொண்டிருக்கும்.

kula deivam home door happy

அந்த குலதெய்வத்தை நாம் தொந்தரவு செய்யாமல் இருக்கவேண்டும். அப்படி தொந்தரவு செய்யும்பட்சத்தில் குலதெய்வம் நம் வீட்டை விட்டு சென்றுவிடும். அதற்க்காகத்தான் நம் முன்னோர்கள் நம்மை திட்டுவார்கள். பழங்காலத்து வீடுகளில் வீட்டின் தலைவாசல் நிலை எப்போதும் உயரம் குறைவாகத்தான் இருக்கும். நாம் நம் குலதெய்வத்தை மதித்து தலை குனிந்து செல்லவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு வாசல் நிலை உயரம் குறைவாக அமைக்கப்பட்டிருக்கும்.

kula deivam home door happy

கோவில்களுக்கு செல்லும்போது எப்படி கோவில் நிலையை மிதிக்காமல் தாண்டி செல்கிறோமோ அதுபோலவே நம் தலைவாசல் நிலையையும் மிதிக்காமல் வீட்டிற்குள் நுழைய வேண்டும். வீட்டின் நிலையில் நின்று பேசுவது, அரட்டை அடிப்பது, நிலையை மிதிப்பது, தலை சீவுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டால் நமக்கு பிரச்சனைகள் தான் உண்டாகும். வீட்டு வாசல் படிகளில் அமர்ந்து பெண்கள் அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்களிடம் பேசுவதை தவிர்க்கவும்.

kula deivam home door happy

நாம் தினமும் மாலை வேளைகளில் நம் வீட்டின் தலைவாசல் நிலையில் மஞ்சள், குங்குமம் வைத்து நிலையின் இருபுறங்களிலும் விளக்கு பொருத்தி வைத்து வழிபட்டால் நம் முன்னோர்களும், நம் குல தெய்வமும் நமக்கு வரும் பிரச்சனைகளை நம்மை அண்டவிடாமல் பார்த்துக்கொள்வார்கள். இப்படி நாம் தொடர்ந்து செய்துவருவதால் நம் வீட்டில் நிம்மதி பெருகி, பணவரவு அதிகரிக்கும் என்பது ஐதீகம். எனவே இனி வீட்டு தலைவாசல் நிலையை முறையாக பராமரித்து குலதெய்வத்தின் அருளை பெறுவோம்.

kula deivam home door happy

kula deivam home door happy