தகவல்கள்

திருப்பதிக்கு மிக அருகில் உள்ள பழமைவாய்ந்த சிவலிங்கம்! திருப்பதிக்கு போறவங்க மறக்காம இங்கயும் போயிட்டு வருவது நல்ல பலனை கொடுக்குமாம்!

Jan 12 2022 11:04:00 AM

திருப்பதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் குடிமல்லம் என்ற இடத்தில் மிகவும் தொன்மையான சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கம் கி.மு.3 ஆம் நூற்றாண்டு அல்லது கி.மு.1 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று சொல்லபடுகிறது. கி.பி.2ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்றும் சிலர் சொல்கிறார்கள்.

kudimallar sivaperuman temple tirupathi

சிலர் இந்த சிவலிங்கத்தை இரண்டாவது பழமையான சிவலிங்கம் என்று சொல்கிறார்கள். எப்படியும் முதல் இரண்டு பழமையான சிவலிங்கங்களில் நிச்சயம் இந்த சிவலிங்கம் இடம்பெறும். இந்த ஆலயத்தின் பெயர் குடிமல்லர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிவனை பரமேஸ்வரர் என்று அழைக்கிறார்கள்.

kudimallar sivaperuman temple tirupathi

மிகவும் பழமையான சிவலிங்கங்களில் தான் சிவபெருமானின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த குடிமல்லர் ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தில் சிவபெருமானின் உருவம் பொறித்து வைக்கப்பட்டுள்ளது. இதே போன்ற சிவபெருமான் உருவம் பொரித்த சிலை மதுரை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கூட சிவபெருமானின் உருவம் பொரித்த லிங்கம் உள்ளது. திருப்பதி போறவங்க நிச்சயம் இந்த குடிமல்லர் ஆலயத்துக்கு சென்று பழமையான சிவபெருமானின் சிலையை வழிபட்டு வந்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

kudimallar sivaperuman temple tirupathi