தத்வமஸி

எல்லா கோவிலிலும் உள்ள அறிவியல் உண்மைகள்! தாலி தங்கத்தில் அணிவதற்கும், கோவிலை இடமிருந்து வலது புறமாக சுற்றுவதற்கும் இது தான் காரணம்!

Nov 23 2021 05:58:00 PM

ஒருவர் தினசரி கோவிலுக்கு சென்றுவருவதை வழக்கமாக வைத்திருந்தால் அவருடைய ஆயுட்காலம் கூடிக்கொண்டே இருக்கும். எந்தவித நோய், நொடியின்றி ஆரோக்கியமுடன் இருப்பார்கள். பிராமணர் சமூகத்தை சேர்ந்த நிறைய அர்ச்சகர்கள் அதிக நாட்கள் ஆயுட்காலத்துடன் இருப்பதற்கு இது தான் கரணம். இது வெறும் கடவுள் பக்தி மட்டும் கிடையாது. இதுக்கு பின்னாடி நிறைய அறிவியல் உண்மைகள் ஒளிந்துள்ளது.

kovil life change happens

கோவில் கட்டுவதற்கு முன்னர் நம் முன்னோர்கள் காந்த அலைகள் எந்த இடத்தில் அதிகமாக இருக்குமோ அந்த இடத்தை தேர்ந்தெடுத்து தான் கோவில் கட்டுவார்கள். அந்த குறிப்பிட்ட கோவில் கட்டும் இடத்தில் சுற்றுவட்டாரப்பகுதியில் எந்த இடத்தில் காந்த அலைகள் அதிகமாக வீசுகிறது என்று கண்டுபிடித்து அந்த இடத்தில் தான் மூலஸ்தானத்தை வைப்பார்கள். அதாவது கோவிலின் கருவறையை அந்த இடத்தில் நிறுவுவார்கள்.

kovil life change happens

கோவிலின் கருவறை அந்த கோவிலின் மையப்பகுதியில் இருக்கும். கருவறையில் கடவுளின் சிலைக்கு கீழே சில செப்புத்தகடுகளை வைத்து புதைத்த பின்னர் அந்த இடத்தில் கடவுளின் சிலையை வைப்பார்கள். இதனால் அந்த கோவிலில் எப்பவும் பாசிட்டிவ் எனர்ஜி இருந்துகொண்டே இருக்கும். ஒருகோவிலின் கருவறை எப்பவும் மூன்று பக்கங்கள் சுவர்களை கொண்டு மூடியும், வாசல் கதவு உள்ள இடம் மட்டும் திறந்த நிலையில் இருக்கும். இப்படி இருப்பதால் அந்த பாஸிட்டிவ் அலைகள் அந்த கருவறையில் இருந்துகொண்டே இருக்கும்.

kovil life change happens

மூலஸ்தானத்தில் விளக்கு எப்போதும் எறிவதும், கடவுளின் சிலைக்கு பின்புறம் கண்ணாடி வைத்திருப்பதும் இந்த பாசிட்டிவ் எனர்ஜி அதிகப்படுத்துவதற்காகத் தான். இந்த நேர்மறையான அலைகள் எப்போதும் முலஸ்தானத்தில் இடமிருந்து வலது புறமாக சுற்றிக்கொண்டே இருக்கும். இதனால் தான் கோவிலின் கருவறையை இடமிருந்து வலது புறமாக சுற்றவேண்டும் என்று சொல்கிறார்கள். சட்டை அணியாமல் நாம் கோவிலுக்கு செல்வதால் அந்த பாசிட்டிவ் எனர்ஜியை நம் உடல் நேரடியாக எடுத்துக்கொண்டு நமக்கு நேர்மறையான எண்ணங்களை தோற்றுவிக்கும்.

kovil life change happens

இதனால் தான் கோவிலுக்குள் சட்டை அணியாமல் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். அதேபோல மந்திரங்கள் சொல்லும்போதும், அபிஷேகங்கள் செய்யும்போதும் இந்த காந்த அலைகள் பல மடங்கு சக்தி பெற்று நமக்கு இன்னும் அதிக எனர்ஜியை கொடுக்கிறது. கோவிலுக்கு சென்றால் மனஅமைதி கிடைப்பதற்கும் இதுதான் காரணம். பெண்கள் தாலியை தங்கத்தில் அணிந்திருந்தால் அந்த தங்கம் பெண்களுக்கு இதயம் சம்மந்தமான எந்த நோய்களும் வராமல் உடலில் கொழுப்பின் அளவை கூட்டாமல் இருக்க உதவுகிறது. இனியாவது கோவிலுக்கு செல்லும்போது அங்குள்ள அறிவியல் உண்மைகளை புரிந்துகொண்ட முறையாக வழிபட்டால் நிறைய மகிமைகளை பெறலாம்.

kovil life change happens