தகவல்கள்

இத்தனை இயற்கை பேரழிவுகள் வந்தபோதும் கேதார்நாத் ஆலயத்துக்கு ஒண்ணுமே ஆகலேயே! இந்த ஆலயத்தை கட்டியது யார் தெரியுமா?

Nov 23 2021 06:27:00 PM

நம்ம ஊரில் வருசத்துக்கு ஒருமுறை மிக கனமழை பெய்யும். அப்போது சென்னை போன்ற பகுதிகளில் பெருத்த பாதிப்பு ஏற்படும். இங்கு இவ்வளவு பிரச்சனை வருவதற்கு சென்னை கடலுக்கு மிக அருகில் இருப்பது தான் காரணம். மக்களும் எல்லாத்தையும் மறந்துவிட்டு புயல், மழை நின்றபிறகு தங்கள் வேலைகளை பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் இமயமலையில் அமைந்துள்ள கேதர்நாத் ஆலயத்தில் நடக்கும் கதையே வேறு.

kedharnath lord shiva temple

இமயமலை எப்படி இருக்கும் என நம்ம எல்லாருக்கும் தெரியும். எப்பவும் புயல், பனி, மழை என தட்பவெட்ப நிலை மாறிக்கொண்டே இருக்கும். இருந்தாலும் அங்குள்ள இந்த கேதார்நாத் ஆலயத்துக்கு எந்த பாதிப்பும் வராது. 2013ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவின்போது இந்த ஆலயமே வெள்ளத்தில் மூழ்கிப்போனது. இருந்தும் இந்த கோவிலின் கட்டுமானத்திற்கு ஒரு சிறு பாதிப்பு கூட ஏற்படவில்லை. இந்த கேதார்நாத் பகுதியில் இவ்வளவு பிரச்சனை வந்தபோதும் இந்த ஆலயத்திற்கு சிறு பாதிப்பு கூட ஏற்படவில்லையே என அறிவியல் ஆய்வாளர்களும், கட்டிட கலை நிபுணர்களும் வியப்படைந்தார்கள்.

kedharnath lord shiva temple

அந்த பாதிப்பு வந்தபோது பாதிப்பை ஏற்படுத்திய மூலப் பகுதி இந்த கோவில் அமைந்துள்ள இடத்தில் இருந்து சில மீட்டர் உயரத்தில் தான் இருந்துள்ளது. இருந்தும் இந்த கோவிலின் பின்புறம் உள்ள ஒரு மிகப்பெரிய பாறைதான் இந்த பாதிப்பில் இருந்து கோவிலை காப்பாற்றியது என்று கண்டுபிடித்துள்ளனர். பேருந்து வசதிகள் இந்த கோவிலை அடையும் 14 கிலோமீட்டருக்கு முன்பே நிறுத்திவிடுவார்கள். அதன்பிறகு நடைப்பயணமாகவோ, குதிரை சவாரி செய்தோ அல்லது பல்லாக்கு மூலமாகவோ தான் கோவிலுக்கு செல்லமுடியும். இந்த கோவில் வருடத்தில் வெறும் ஆறு மாதங்கள் தான் திறந்திருக்கும். ஏப்ரல் மாதத்தில் இருந்து கார்த்திகை மாதம் பௌர்ணமி வரை மட்டுமே இந்த ஆலயம் திறந்திருக்கும். இங்கு நிலவும் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக இந்த ஆலயத்தை மற்ற நாட்களில் திறக்கமாட்டார்கள்.

kedharnath lord shiva temple

அதன்பிறகு இந்த ஆலயத்தில் உள்ள சிலைகளை குப்தகாசியில் உகிமத் என்னும் இடத்திற்கு கொண்டுசென்று வழிபடுவார்கள். மகாபாரதத்தின் போது நிறைய உயிர்களை பாண்டவர்கள் கொன்றதால் மிகுந்த வருத்தம் அடைந்தனர். பின்னர் சிவனிடம் தவம் செய்து செஞ்ச பாவத்தை கழுவுவதற்காக கேதார்நாத் சென்று சிவபெருமானை வழிபட்டு பாவ விமோசனம் பெற்றார்கள். இந்த ஆலயத்தை முதன்முதலில் உருவாக்கியது பாண்டவர்கள் தான். ஆனால் இன்று உள்ள ஆலயத்தை பல கட்டுமானங்களுடன் மிகப்பெரிய அளவில் உருவாக்கியவர் ஆதி சங்கரர். பின்னர் தனது கடைசி காலத்தில் இந்த ஆலயத்திலேயே ஜீவசமாதி அடைந்தார். இவர் ஜீவசமாதி ஆன இடமும் இந்த கோவிலுக்கு அருகில் தான் உள்ளது.

kedharnath lord shiva temple