ஆன்மீகம்

ரேகையை வைத்து நம்முடைய மொத்த வாழ்க்கையையும் கணிக்க இயலுமா? ரேகை பார்க்காமலும் சிலர் எப்படி பலன் சொல்கின்றனர்?

Sep 05 2021 10:46:00 AM

ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவர்களுடைய கிரக பலன்களை வைத்தே கணிக்கப்படுகிறது. ஜோதிடம் என்பது இந்த கிரகங்களைப் பற்றிய தகவலாகும். ஒரு ஜாதகத்தை எழுதி ஒரு ஜோதிடரிடம் சென்று அந்த ஜாதகத்தில் உள்ள கட்டங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்வதை நாம் ஜோதிடம் என்கிறோம். ஆனால் இது மட்டும் ஜோதிடம் என்றில்லை.

regai-josiyam kuri-solluthal

ஜோதிடத்தில் பல வகைகள் உள்ளன. ஜோதிடர்களில் சிலர் ஒருவருடைய கைரேகையைப் பார்த்து ஜாதகம் சொல்கின்றனர். ஒரு சிலரின் முகத்தைப் பார்த்து அவர் எப்படி இருப்பார் என்பதை நாமே கணிக்க முடியும். அது போலவே ஒருவருடைய கைரேகையைப் பார்ப்பது ஒருவரின் குணாதிசயங்களை உங்களுக்குச் சொல்லும்.

regai-josiyam kuri-solluthal

பழங்காலத்தில் வாழ்ந்த அரசர்கள் ஒரு நல்ல விஷயத்தைத் தொடங்குவதற்கு முன் கைரேகையைப் பார்த்தனர். ஆனால் இப்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால் கைரேகை பார்வையாளர்களை பெரும்பாலும் சுற்றுலா தளங்களில் மட்டுமே அதிகம் பார்க்க முடிகிறது.

regai-josiyam kuri-solluthal

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே கைரேகை பார்த்தாலும் பெரும்பாலும் பெண்களே குறி சொல்வதில் ஈடுபடுகின்றனர். கைகளில் உள்ள கைரேகை மற்றும் முகத்தைப் பார்த்து சம்பந்தப்பட்ட நபரின் நன்மைகளையும் பிரச்சனைகளையும் சொல்கின்றனர்.

regai-josiyam kuri-solluthal

இந்த கைரேகை ஜோசியத்தை ஒரு சிலர் குறி சொல்லுதல் என்றும் அழைப்பர். அந்த காலத்தில் அது மிகவும் நம்பப்பட்டது. கடவுள் குறி என்று நாம் படித்திருக்கிறோம். எனவே இது கதை அல்ல. நம் முன்னோர்கள் பின்பற்றிய ஒன்று தான். ஒரு சிலர் இன்னும் இதில் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். பலராலும் இது நம்பப்படாமல் இருப்பதற்கு காரணம் போலி ஆசாமிகள் மட்டுமே.