தகவல்கள்

கடுகை கடனாக பக்கத்துக்கு வீட்டுக்காரங்க கேட்டால் ஏன் யாரும் தருவதில்லை? கடுகுக்கும், பேய்க்கும் என்ன சம்மந்தம்?

Aug 25 2021 10:09:00 AM

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பக்கத்துக்கு வீட்டுக்கார அக்கா கொஞ்சம் கடுகு குடுங்க, நாளைக்கு திருப்பி குடுத்துறேன் என்று என்னிடம் கேட்டார். நானும் வீட்டில் உள்ள சமையல் அறைக்கு சென்று கடுகு டப்பாவை எடுத்து வெளியே வருவதற்கு முன்னர் எங்க அம்மா கடுகெல்லாம் எங்க வீட்டுல இல்லம்மா, நீ போய் கடையில வாங்கிக்கோ என்று தி*ட்டி அனுப்பிவிட்டார்.

kadugu not given any home

ஏம்மா அதான் வீட்டுல இவ்வளவு கடுகு இருக்குதே, அப்புறம் ஏன் கடுகு இல்லைன்னு பொ*ய் சொன்ன என்று எங்க அம்மாவிடம் கேட்டேன். கடுகெல்லாம் யாருக்கும் ஓசு குடுக்கக்கூடாது தம்பி, அப்படி கொடுத்தா நம்ம குடும்பத்துக்கு பிரச்சனை வந்துகிட்டே இருக்கும், அதுவும் இரவு நேரத்தில் கடுகு யாருக்கும் கொடுக்கவே கூடாது, அந்த அம்மா அது தெரிஞ்சும் வந்து கேக்குது பாரு என்று சொன்னார். அதுக்கு அப்புறம் கடுகைப் பற்றி நிறைய கதைகளை சொல்ல ஆரம்பித்தார்.

kadugu not given any home

யாராவது இ*றந்து விட்டால் அந்த பி*ணத்தை ம*யானத்திற்கு கொண்டு சென்று எ*ரித்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வரும்போது கடுகை வழி முழுவதும் போட்டுக்கிட்டே வருவாங்க. இது இந்துக்களின் கலாச்சாரம். இ*றந்த நபர் பே*யாக மாறி மீண்டும் தான் வாழ்ந்த வீட்டிற்கு வர நினைப்பாராம். அப்போது இந்த கடுகை பொறுக்கிக்கொண்டே வருவாராம். கடுகை பொறுக்கிக்கிட்டு எவ்வளவு தூரம் வரமுடியும். கடுகு தான் ரொம்ப இருக்குமே, இதனால் வீட்டை கண்டு பிடிக்க முடியாமல் திரும்பி போய்விடுவாராம்.

kadugu not given any home

ஒருமுறை புத்தரிடம் தன் மகனை இ*ழந்த தாய் ஒருவர் என் மகனின் உ*யிரை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டாராம். உடனே புத்தர் இந்த ஊரில் உள்ள எல்லா வீட்டிற்கும் சென்று எந்த வீட்டில் யாரும் இ*றக்காமல் இருக்கிறர்களோ அந்த வீட்டில் இருந்து கடுகு வாங்கிட்டு வாங்க, நான் உங்க பையனின் உ*யிரை மீட்டு தருகிறேன் என்று சொன்னாராம்.

kadugu not given any home

அதேபோல அந்த பெண்மணியும் எல்லா வீட்டிற்கும் சென்று உங்க வீட்டில் யாரும் சா*காமல் இருக்காங்களா, கடுகு குடுங்க என்று கேட்டாராம். எல்லா வீட்டிலும் யாரவது ஒரு நபர் இ*றந்து இருந்தார்களாம். அப்போதுதான் அந்த பெண்ணுக்கு இ*றப்பு என்பது எல்லார் வாழ்க்கையிலும் நடப்பது தான், அதை யாரும் மீட்க முடியாது என்று தெரிந்து கொண்டாராம். எங்க வீட்டில் இரவில் யாருக்காவது பே*ய் கனவு வந்தால் உடனே கடுகை எடுத்து தூவி விட்டுவிட்டு தூங்கிவிடுவோம். பே*ய் வந்து அந்த கடுகை பொறுக்கிக்கொண்டு நம்மை தொ*ந்தரவு செய்யாது என்கிற கலாச்சாரம் இன்றும் நிறைய கிராமங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

kadugu not given any home