தெய்வீகம்

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் : அம்மை நோய் நீங்க, குழந்தை பாக்கியம் பெற மாரியம்மனை வழிபடுவோம்

Feb 05 2021 05:41:00 PM

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைத்துள்ளது இந்த இருக்கன்குடி மாரியம்மன் ஆலயம். தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் ஆலயமாக இந்த கோவில் விளங்குகிறது.

irukkankudi mariyamman temple saththur

கோவில் உருவான விதம்,
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்மணி இங்கே வந்து சாணம் பொறுக்கிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சாமி வந்தது. அவர் சாமி ஆடிய இடத்தில் உள்ளே ஒரு சிலை இருப்பதாகவும், அந்த சிலையை எடுத்து வழிபட்டு இங்கே அந்த சிலைக்கு கோவில் கட்டவேண்டும் எனவும் தெரிவித்தார். அவர் கூறியது போலவே அந்த இடத்தை தோண்டியபோது அங்கே மாரியம்மன் சிலை இருந்தது. பின்னர் அந்த மாரியம்மனை எடுத்து அங்கே கோவில் கட்டி இன்றுவரை வழிபட்டு வருகின்றனர்.

irukkankudi mariyamman temple saththur

அந்த பெண்மணியின் பரம்பரையை சேர்ந்தவர்கள் தான் இன்றும் அந்த கோவிலுக்கு பூசாரியாகவும், அந்த கோவிலை பராமரித்தும் வருகின்றனர்.

irukkankudi mariyamman temple saththur

கோவிலின் இருப்பிடம்,
நாம் ஒரு ஒரு கோவிலுக்கு சென்று நதியில் ஒருமுறை புனித நீராடினாலே நமக்கு நன்மைகள் விளையும். ஆனால் இந்த கோவில் வைப்பாறு, அர்ஜுனன் ஆறு என்ற இரண்டு ஆறுகளுக்கு நடுவே உள்ள மண் திட்டில் அமைந்துள்ளது. இந்த இரண்டு ஆறுகளிலும் புனித நீராடி இந்த அம்மனை வணங்குவதால் நமக்கு கோடி புண்ணியம் உண்டாகும் என்பது ஐதீகம்.

irukkankudi mariyamman temple saththur

இருக்கன்குடி மாரியம்மனின் சிறப்பு,
எல்லா மாரியம்மன் கோவில்களிலும் இடதுகாலை மடக்கி வலது காலை தொங்கவிட்டு அம்மன் காட்சியளிப்பார். ஆனால் இந்த கோவிலின் அம்மன் அண்டசராசரத்தில் ஆக்கலும் அழிக்களும் நானே, நானின்றி இந்த உலகில் ஒரு அணுவும் அசையாது என்பதற்கு இணங்க வலது காலை மடக்கி இடது காலை தொங்க விட்டிருப்பார். இதுவே இந்த கோவிலில் உள்ள மிக சிறப்பு வாய்ந்த அம்சமாகும்.

irukkankudi mariyamman temple saththur

இருக்கன்குடி மாரியம்மனை வழிபடுவதால் உண்டாகும் நன்மைகள்,
இருக்கன்குடி மாரியம்மனை தரிசிக்க வருபவர்கள் அக்கினி சட்டி, அழகு குத்துதல், அம்மனுக்கு சேலை  சாத்துதல்,விளக்கு போடுதல், பூஜை செய்தல் போன்ற பிரார்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.

irukkankudi mariyamman temple saththur

அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபட்டால் அம்மை நோ ய் குணமடையும் என்பது ஐதீகம். குடும்பத்தில் ச ண் டை, ச ச் ச ர வு பிரச்சனை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுவதன் மூலம் குடும்ப க வ லை க ள் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கரும்பு தொட்டில் கட்டுவதாக வேண்டிக்கொள்கின்றனர். குழந்தை பிறந்த பிறகு தங்கள் குழந்தையை இங்கே அழைத்து வந்து கரும்பு தொட்டில் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். கண் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் அம்மனின் தீர்த்தத்தை வாங்கி தங்கள் கண்களில் விட்டு சரியாகும் படி வேண்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். நாமும் நம்மால் முடிந்த போது இதுபோன்ற சக்தி வாய்ந்த அம்மனை சென்று வழிபட்டு வந்தால் நம் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்.

irukkankudi mariyamman temple saththur