ஆன்மீகம்

சின்ன எறும்பு வரை கூட விட்டு வைக்கவில்லை! இந்து மதத்தின் கட்டமைப்பைக் கண்டு பிரம்மித்துப்போன ஐரோப்பிய நாடுகள்! இவ்வளோ நாள் நமக்கு எப்படித் தெரியாம போச்சு?

Sep 15 2021 08:40:00 AM

எங்க குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா வந்து சரியானதில் இருந்து, எனக்கு ஆன்மீகத்தின் மீதான தேடல், முன்பை விட கூடுதலாக அதிகரித்துள்ளது. பாதிப்பு உறுதியான முதல் பத்து நாட்கள் என் கூடவே இருந்தது கொஞ்சம் நம்பிக்கையும், ஒரு சில மருந்துகள் மட்டுமே. சொந்த பந்தம் எல்லாம் ஒரு மாதம் கழித்து, எங்களுக்கு சரியாச்சான்னு உறுதி செய்த பிறகே வீட்டுக்கு வந்தனர். அப்போதே புரிந்துவிட்டது. நமக்கு ஏதாவது என்றால், நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். எத்தனை குறை சொன்னாலும், இக்கட்டான நேரத்தில் என்னுடன் வந்தது இறை நம்பிக்கை தானே.

god hindu tamil 

எனக்குத்தெரிந்து இந்து மதத்தில் சின்ன எறும்புகளுக்குக் கூட ஒரு போஸ்டிங் கொடுக்கப்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சின்னப்பையனா இருந்த அப்போ, சர்க்கரை மீது ஊர்ந்து செல்லும் எறும்பை அடிக்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க. ஏனென்று கேட்டால், அது சாமி எறும்பு, விநாயகருக்கு பிடித்தமானதுன்னு சொல்லுவாங்க. இந்து மதத்தில் பசுவையும், யானையையும், பாம்பையும், வேம்பையும் சிறப்புடையதாகப் போற்றி வந்திருக்கின்றனர்.

god hindu tamil

எந்த சிற்றின உயிர்களையும் துன்புறுத்தக்கூடாது என்றும் அவற்றைப் போற்றிப் பேண வேண்டும் என மதநம்பிக்கை வலியுறுத்துகிறது.  திருக்குளங்களில் மீன்களுக்கு இரை போடுவது; ஈ, எறும்பு, எலி போன்றவற்றுக்கு உணவாக வாசலில், வாயிற்படிகளில் பச்சரிசி மாக்கோலம் போடுவது, புற்றுகளில், பாம்புக்குப் பாலும், முட்டையும் வைப்பது, அன்றாடம், பகலில், காக்கைக்கு  உணவளிப்பதும், இரவு வேளையில் நாய்களுக்கு உணவளிப்பதும், பறவைகளுக்கு உணவாக நெற்கதிர்களைத் தொங்க விடுவதும் இந்துக்களின் வழக்கமாக இருந்து வருகிறது.

god hindu tamil

இதோடு, சிற்றினங்களை நமக்கு மேலானவையாகவும் கருத வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான தெய்வங்களின் வாகனங்கள் மிருகங்களாகவே பறவைகளாகவே இருப்பதாக விவரிக்கப்பட்டுள்ளன. விநாயகன் யானைத்தலையன், அவன் ஆட்கொண்டு அமர்ந்திருப்பது மூஞ்சுறு, தம்பி முருகன் மகிழ்ந்து வருவது மயிலில், தகப்பன் சிவன் அணிந்திருப்பது நாகம், மாமன் திருமால் படுப்பது பாம்பணையில், அவன் ஏறும் வாகனம் கருடன், எடுத்த உருவங்கள் மீனும், பன்றியும், சிங்கமும், தர்மதேவன் வருவது எருமையின் மீது, சனீஸ்வரனை சுமப்பது காகம் இப்படி நூற்றக் கணக்காக பட்டியலிடலாம். இந்த விவரங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்து புரிந்துகொண்ட ஒரு சில ஐரோப்பியர்கள் இன்றளவும் சமூக வலைதளத்தில் இந்திய பண்பாட்டை மெச்சி பதிவிட்டு வருகின்றனர். எல்லாம் இருந்தும், நமக்குத்தான் எதுவுமே தெரியல பாருங்க.