தகவல்கள்

ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு செல்லும் புகைப்படத்தை வீடுகளில் வைத்து வழிபடலாமா? அப்படி வழிபட்டால் நமக்கு என்ன நடக்கும் தெரியுமா?

Feb 11 2021 04:31:00 PM

ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை கொண்டு செல்லும் புகைப்படத்தை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்று நிறைய பேர் சொல்வதை கேட்டிருப்போம். ஆஞ்சநேயர் எதற்காக சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு செல்கிறார் தெரியுமா?

hanuman sanjeevi mountain laxman

தன் கடவுள் லட்சுமணன் ஆ ப த் தி ல் சிக்கிக்கொண்ட போது அவரது உ யி ரை காப்பாற்றுவதற்காக அந்த சஞ்சீவி மலை என்ற மூலிகைகள் நிறைந்த மலையை தன் ஒரு கரத்தில் தூக்கிச் செல்கிறார். ஒரு உ யி ரை காப்பாற்ற மூலிகைகள் நிறைந்த மலையை அவர் எடுத்துச்செல்வது என்பது ஒரு நல்ல காரியம். அப்படிப்பட்ட புகைப்படத்தை நாம் ஏன் நம் வீடுகளில் வைத்து வழிபடக்கூடாது?

hanuman sanjeevi mountain laxman

அவர் வானில் மலையை தூக்கிச் செல்லும் போது வழிநெடுகில் விழுந்த  மரங்களும்,பாறைகளும் தான் இன்றளவும் நமக்கு உதவும் மரங்களாகவும், காடுகளாகவும், மலைகளாகவும் மாறி இருக்கின்றன. இலங்கை என்னும் சிறிய நாடு இப்பேற்பட்ட மூலிகை மலைகளால் நிறைந்திருப்பதற்கு காரணம் நம் அனுமனும் அந்த சஞ்சீவி மலையும் தான். இலங்கையில் தோண்டத் தோண்ட கனிமங்களும், செல்வங்களும் கிடைக்க அனுமனே காரணம் என்று வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது.

hanuman sanjeevi mountain laxman

அப்பேற்பட்ட புகைப்படத்தை நம் வீடுகளில் வைத்து வழிபட்டால் நமக்கு அந்த அனுமன் நன்மையை தான் தருவார். அவர் ஒரு போதும் உங்களை கைவிடமாட்டார். சிலருக்கு காளி தெய்வங்களை பிடிக்கும், சிலருக்கு அம்மன் தெய்வங்களை பிடிக்கும், சிலருக்கு முருகப்பெருமானை பிடிக்கும், அவர்கள் அந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வழிபட்டு தானே வருகிறார்கள்.

hanuman sanjeevi mountain laxman

கடவுள் எங்கும் இருப்பார், தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், நாம் விரும்பும் கடவுள்களின் எந்த மாதிரியான புகைப்படத்தையும் நம் வீட்டில் வைத்து அந்த கடவுளை மனமுருகி வேண்டினால் அந்த கடவுள் நம்மை ஒரு போதும் கைவிடமாட்டார் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

hanuman sanjeevi mountain laxman