தகவல்கள்

பக்தர்களின் கஷ்டங்களை போக்கும் சித்தர் ஆலயம்! சென்னையில் இப்படி ஒரு இடம் இருக்கா?

Nov 23 2021 12:56:00 PM

கடவுளின் அருளுக்கு சமமான நிறைய சித்தர் ஜீவசமாதிகள் இன்னும் நம்ம நாட்டில் இருக்கத்தான் செய்கின்றன. கோவில்கள் அளவுக்கு இந்த சித்தர் ஜீவசமாதிகள் பிரபலம் இல்லை என்றாலும் இன்றும் மக்கள் ஜீவசமாதிகளுக்கு சென்று சித்தர்களின் அருளை பெற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள். சித்தர்களின் அருளை பெற்றால் சிவத்தை பெற்றதற்கு சமம் என்பது பல வருடங்களாக மக்களால் நம்பப்படும் விஷயம்.

gurulinga swamykal chennai saithappet

சென்னையில் சைதாப்பேட்டையில் காரணீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் இருந்து 100 அடி தூரத்தில் குருலிங்க ஸ்வாமிகளின் ஜீவசமாதி உள்ளது. காரணீஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் எல்லோரும் அவசியம் குருலிங்க ஸ்வாமிகளின் ஜீவசமாதிக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்கள். 1800 வருடங்களில் வாழ்ந்த சித்தர்களில் இந்த குருலிங்க ஸ்வாமிகளும் ஒருவர்.

gurulinga swamykal chennai saithappet

தமிழகம் முழுவதும் உள்ள எல்லா சிவ ஆலயங்களுக்கும் சென்று அமர்ந்து அங்கே தவம் புரிவதை குருலிங்க ஸ்வாமிகள் வழக்கமாக வைத்திருந்தார். கடைசியாக காரணீஸ்வரர் ஆலயத்திற்கு வந்து தவம் புரிந்து ஜீவசமாதி அடைந்தார் என்று சொல்கிறார்கள். இவர் தவம் புரிந்த போது இவருடைய கையில் லிங்கம் தோன்றியதை மக்கள் பார்த்துள்ளனர். அதனால் தான் இவரை குருலிங்க ஸ்வாமிகள் என்று மக்கள் அழைத்தனர்.

gurulinga swamykal chennai saithappet

இவர் தவம் புரிந்து முடித்தவுடன் இவரிடம் ஆசி வாங்குவதை பக்தர்கள் வழக்கமாக வைத்திருந்தனர். தீராத நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இவரிடம் ஆசி பெற்று தங்கள் நோய்களில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர். இவருடையாய் இறுதி காலத்தில் இவர் காரணீஸ்வரர் ஆலயத்தில் தான் ஜீவசமாதி அடைய விரும்பினார். அந்த கோவிலில் இருந்தவர்கள் அனுமதி மறுக்கவே பின்னர் கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் ஜீவசமாதி அடைந்தார்.

gurulinga swamykal chennai saithappet

இந்த ஜீவசமாதிக்கு செல்லும் பக்தர்கள் எப்பவும் ஒருவித புத்துணர்ச்சியுடன் இருக்கிறார்கள். இங்கு சென்று சில நிமிடங்கள் தியானம் இருந்தால் மனதில் உள்ள குறைகள் நீங்குவதாகவும், நிம்மதி கிடைப்பதாகவும் பக்தர்கள் நம்புகிறார்கள். இங்கு வந்து வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு தீராத நோய்கள் நீங்குகின்றன. சென்னையில் உள்ள மக்கள் மனநிம்மதிக்கு இந்த ஜீவசமாதிக்கு சென்றால் நிறைய பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

gurulinga swamykal chennai saithappet