தெய்வீகம்

#WoW: எங்காவது தாடி மீசையுடன் கடவுளை பார்த்துள்ளீர்களா?

Mar 11 2020 12:04:00 PM

தாடி, மீசை வைத்திருந்தால் தான் கெத்து என்கிற மாதிரியாகிவிட்டது நிலைமை. அந்த கால டி.ராஜேந்திரனில் தொடங்கி, இந்த கால "புள்ளிங்கோ" வரைக்கும் தாடி இருந்தால் தான் மவுசு. இப்படி ஆளாளுக்கு ஒரு மாதிரி ஸ்டைல் வேணும் என்று இருக்கும் நிலையில், ஒருத்தருக்கு குதற்கமாக ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. அதாவது "நமக்கு தாடி, மீசை இருக்கிற மாதிரி கடவுளுக்கும் இருக்குமா.? நான் அந்த மாதிரி பார்த்ததே இல்லையே" என்பது அவருடைய சந்தேகம். சரி, அவர் கேட்டதற்கு விளக்கம் கொடுக்கணுமில்லையா.? வாங்க அதற்கான பதிலை அடுத்து பார்க்கலாம்.

#1. இங்க பாருங்க. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஜம்முனு மீசையோடு காட்சி கொடுக்கிறார்.

god temple tamilnadu

#2. அடுத்து சுசிந்திரம் ஊரில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஓவரும் ஒரே வடிவாக, லிங்க உருவத்தில்  தாடி வைத்துக் கொண்டு காட்சியளிக்கும் ஸ்தாணுமலையன் என்னும் தாணுமலையான் திருக்கோவில்.

god temple tamilnadu

#3. அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை அயலார் ஊரில் கண்டேன்! கண்டேன்! என்று குதித்த அனுமனுக்கும் தாடி உள்ளது.

god temple tamilnadu

#4. Zeus, Poseidon, Hephaestus போன்ற கிரேக்க கடவுள்களும் தாடி வைத்த உருவில் தான் காட்சி தருவார்கள்.

god temple tamilnadu

#5. இயேசு கிறிஸ்துவும் தாடி வைத்த முகம் தான் பாருங்கள்.

god temple tamilnadu

#WoW: இப்படி ஏதாவது ஒரு ரூபத்தில் வித்தியாசமாக காட்சியளிக்கும் கடவுளையும் காண முடியும். கடவுள் என்றால் இப்படித்தான் என்று, நாமே ஒரு வரைமுறைக்குள் வந்துவிடக்கூடாது.