ஆன்மீகம்

சிவபெருமானின் திருவுருவப்படத்தை ஏன் வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்று சொல்கிறார்கள்? விவரம் அறியாமல் நாம் செய்யும் மாபெரும் தவறு!

Jan 28 2021 01:41:00 PM

எங்க வீட்டுக்கு வந்து பலரும், சிவபெருமானின் திருவுருவப்படத்தை வீட்டில் வைத்து பூஜிக்க கூடாது என்கின்றனர். நாங்க பார்வதி, சிவன் இருவரும் சேர்ந்த மாதிரி இருக்கும் படத்தை தான் பூஜை அறையில் வைத்துள்ளோம். இருந்தும் அது ஒரு சிலரின் கண்களை உறுத்துகிறது. அடைப்படையில், சிவபெருமான் முக்திக்கான கடவுள். சக்தி அளவில் சிவபெருமானின் உருவத்திற்கும், சிலைகளுக்கும் அத்தகைய அதிர்வலைகள் உண்டு. வீட்டில் வைத்து பூஜிக்கும் போது, நமக்கும் அந்த எண்ண அலைகள் தொற்றிக்கொள்ளும். இல்லற வாழ்வை தாண்டி, முக்தி நிலையை அடைய மனம் இழுத்துச்செல்லும்.

lord-shiva home god

எங்கள் வீட்டை பொறுத்தவரையில், பார்வதி, சிவபெருமான் படம் உள்ளது. அதை நாங்கள் தினமும் வழிபட்டுவருகிறோம். பல குடும்பங்களில் பார்வதி பரமேஸ்வரரின் திரு உருவங்கள் உள்ளன. இவர்களை வழிபட்டால் எதையும் தாங்கும் இதயம் வரும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் வீட்டில் சிவபெருமான் படத்தை வைத்து பூஜிக்க கூடாது என்பது, பரவலாக உள்ள பழக்கமாகும். முக்கியமாக தமிழ்நாட்டில் பலரது வீட்டில் சிவபெருமானுக்கு இடமில்லை.

lord-shiva home god

பொதுவாக பக்திக்கு என்று தனிப்பட்ட இலக்கணம் கிடையாது. ஏன் சொல்கிறேன் என்றால் சிலர் அதிதீவிர சிவபக்தராக இருப்பார்கள். அவர்கள் பார்வையில் பக்தியின் மேலீட்டால் சிவபெருமான் தொடர்பான படங்களையோ, விக்கிரங்களையோ வைத்து வழிபடுவர். பக்தியின் குறிக்கோள், பக்தியில் கரைந்து போவதுதான். அதன் காரணமாக அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சிவபெருமானிடத்தில் பக்தி செலுத்தி தனது வாழ்க்கையையே நிர்மூலமாக மாறினாலும், அவருக்கு எந்தவித கவலை இல்லை. ஏனென்றால் பக்தியின் நோக்கமே பக்தியில் கரைந்து போவதுதானே.

lord-shiva home god

ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு குறிப்பிட்ட வடிவத்திருக்கும் ஒரு குறிப்பிட்ட அதிர்வு இருக்கிறது. பொதுவாக விக்கிரங்களை வீட்டில் வைத்து வழிபடும் போது, தினசரி பூஜைகள் மற்றும் முக்கியமாக நைவேத்தியம் செய்ய வேண்டும் என்பது நியமம். தினசரி பூஜைகளை செய்யத் தவறினால் கடவுள் விக்கிரங்கள் என்ற போது வீட்டில் உள்ளவர்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். முறையாக செய்ய வேண்டும் செய்யமுடியாது என்றால் வீட்டில் வைத்திருக்க கூடாது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.