கடவுள் என்பவர் நம்முள் இருப்பவர். அவரை மனமுருகி வேண்டினால் நமக்கு வேண்டிய பலன்கள் தானே கிடைக்கும். ஆனால் சிலரோ நான் வேணும்னா விரதம் இருந்து பாக்குறேன், அந்த கடவுள் எனக்கு என்ன கொடுப்பார்ன்னு பார்க்கலாம் என்று கடவுளை சோதனை செய்வார்கள்.
முன்னொரு காலத்தில் வேத வியாசர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் சிஷ்யர்களுடன் பயணம் செய்துவந்தார். அப்போது அங்கே ஒரு சில மக்கள் காசியின் புகழை பற்றி பெருமை பேசிக்கொண்டிருந்தனர். காசிக்கு ஒன்றும் இல்லாமல் சென்றோம், ஆனால் எங்களுக்கு அறுசுவை உணவு கிடைத்தது, காசி மிகவும் சக்தி வாய்ந்த இடம், வாழ்வில் ஒரு முறையாவது காசிக்கு சென்று புண்ணியம் பெற வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்து வியந்த வேதவியாசர் என்னப்பா காசி பற்றி இவ்வளவு பெருமையாக கூறுகிறார்களே? அங்கே அப்படி என்ன இருக்கிறது என்று பார்த்தாக வேண்டும் என்று கூறினார். உடனே அவருடைய சிஷ்யர்களும் தினமும் நாம் பழங்களும், கிழங்குகளும் தான் சாப்பிடுகிறோம்,அங்கு சென்றால் நமக்கு நல்ல உணவு கிடைக்கும் என்று மகிழ்ச்சியில் அனைவரும் காசிக்கு புறப்பட்டனர்.
ஒரு வழியாக காசி வந்தடைந்தனர். காசியை அடைந்த பின்னர் அவர்கள் அனைவரும் வீதி வீதியாகச் சென்று பிச்சை எடுக்க கிளம்பினர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் பல நாட்கள் பிச்சை எடுத்தும் ஒரு சிறு அரிசி கூட கிடைக்கவில்லை. இதைப் பார்த்து கோவம் அடைந்த வேதவியாசர் என்னடா அனைவரும் காசியைப் பற்றி பெருமையாக சொன்னார்கள்? ஆனால் நமக்கு ஒன்றும் கிடைக்கவில்லையே? நான் இந்த காசியையும், காசி மக்களையும் ச பி க் க ப் போகிறேன் என்று சொல்லி ச பி க் க தொடங்கினார்.
அப்போது அங்கே ஒரு மாளிகையின் கதவு திறந்தது. அந்த வீட்டில் இருந்த பெண்மணி ஏன் நீங்கள் காசியை ச பி க் கிறீர்கள் என்று கேட்டார். வேதவியாசர் நடந்ததை விளக்கினார். அப்போது அந்த பெண்மணி உள்ளே வாருங்கள், உங்களுக்கான அறுசுவை உணவு இங்கே தயாராக உள்ளது என்று கூறினார். உடனே மகிழ்ச்சியில் அனைவரும் உள்ளே சென்றனர். அப்போது அவர்களுக்கு வாழை இலை போடப்பட்டது. வாழை இலை போடப்பட்டு வெகுநேரம் ஆகியும் உணவு பரிமாறப்படவில்லை.
முனிவர் மீண்டும் கோபமடைந்தார். அந்த பெண்மணி எங்கே என்று தேடிக்கொண்டிருந்த போது அவர்களின் இலையில் அறுசுவை உணவு வந்துவிட்டது. எப்படி உணவு வந்தது என்று கூட தெரியாமல் அனைவரும் தங்கள் அறுசுவை உணவை உண்டனர். பின்னர் அந்த பெண்மணிக்கு நன்றி தெரிவிக்க உள்ளே சென்றனர்.
அப்போது அங்கே சிவனும், பார்வதி தேவியும் உள்ளே இருந்தனர். அவர்களை வேதவியாசகரும், அவருடைய சிஷ்யர்களும் வணங்கினர். அப்போது பார்வதி தேவி அவர்களுக்கு ஏன் இத்தனை நாட்கள் அவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்பதற்கு விளக்கம் கொடுத்தார்.
வேத வியாசகரே நீங்கள் காசியில் அப்படி என்ன உள்ளது என்று கடவுளின் சக்தியை அறிய இங்கே வந்தீர்கள், உங்களுடைய சீடர்கள் நல்ல உணவு கிடைக்கும் என்று நம்பி இங்கே வந்தார்கள், அதனால் தான் உங்களுக்கு உணவு கிடைக்கவில்லை. நீங்கள் காசியின் பெருமையும், மகிமையும் பற்றிய் அறிய இங்கே வந்திருந்தால் உங்களுக்கு காசி வேறு மாதிரி இருந்திருக்கும் என்று கூறினார். தன் தவறை உணர்ந்த அவர்கள் இறைவனிடம் ம ன் னி ப் பு கேட்டனர்.
இதைப்போன்று தான் இந்த பூமியில் வாழும் மக்கள் கடவுளின் சக்தியை அறிவதற்காக விரதம் இருப்பது, மாலை போடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். அப்படி செய்வது மிகப்பெரிய த வ று. நாம் எப்போதும் இறைவனை நம்பி ஒரு செயலில் ஈடுபட்டால் இறைவன் நமக்கு எப்போதும் அருள்புரிவார்.