தத்வமஸி

கடவுளுக்கு படைக்கும் பிரசாதம் கடவுளை போய் சேருமா? நீண்ட நாள் கேள்விக்கு கிடைத்த பதில்.

Feb 05 2021 12:20:00 PM

நம்மை சுற்றி எவ்வளவு ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு நாத்திக வாதிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். நாம் வீடுகளிலும் கோவில்களிலும் கடவுளுக்கு உணவு வைத்து படைத்து பின்னர் அதை பிரசாதமாக சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளோம். அதை பார்க்கும் நாத்திகர்கள் ஏன்டா கடவுளுக்குன்னு சொல்லிட்டு இப்படி நீங்களே சாப்புடுறீங்களே அந்த கடவுளா வந்து சாப்பிடுறாரு? ஏன்டா இப்படி பண்றீங்க என்று கிண்டல் செய்வார்கள்.

god pray prasatham

ஒரு முறை சிஷ்யன் ஒருவன் குருவிடம் கேள்வி கேட்கிறார். " குருவே, நாம் கடவுளுக்கு படைக்கும் பிரசாதம் கடவுள் சாப்பிடுவார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. கடவுள் சாப்பிடுவாரா இல்லையா என்பதே தெரியாமல் நாமே சாப்பிட்டால் அப்புறம் எதற்கு நாம் அந்த கடவுளுக்கு உணவு படைக்க வேண்டும்?" என்று கேட்டார். குரு சிறிது நேரம் யோசித்து விட்டு வா நாம் நம்முடைய வேத பாட சாலைக்கு செல்லலாம் என்று கூறினார்.

god pray prasatham

பாடசாலைக்கு சென்று பாடம் நடத்தினார்.  பாடத்தை நன்கு படியுங்கள் என்று கூறிவிட்டு அரைமணி நேரம் அனைவருக்கும் நேரம் கொடுத்தார். பின்னர் கடவுள் பற்றி கேள்வி கேட்ட அந்த சிஷ்யனை அழைத்தார். பாடத்தை முழுமையாக படித்துவிட்டாயா என்று கேட்டார்.  அந்த சிஷ்யனும் நான் முழுமையாக படித்துவிட்டேன் என்று கூறினார். பின்னர் அந்த சிஷ்யனை பார்த்து நீ படித்ததை கூறு என்று கேட்டார். அந்த சிஷ்யனும் தான் படித்ததை முழுமையாக கூறினார். நீ கூறியது தவறு, உன் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வா என்று சொன்னார். அந்த புத்தகத்தில் பார்த்தபோது அந்த சிஷ்யன் கூறிய அனைத்தும் சரியாகத்தான் இருந்தது. குருவே நான் கூறிய அனைத்தும் சரி தான் பின்னர் ஏன் தவறு என்று கூறினீர்கள் என்று சிஷ்யன் கேட்டார்.

god pray prasatham

நீ இந்த புத்தகத்தை படித்தது உண்மை என்றால் அவை அனைத்தும் உன் மூளைக்கு வந்துவிட்டது என்றால் ஏன் இந்த புத்தகத்தில் இன்னும் அந்த வாசகங்கள் உள்ளன என்று கேட்டார். சிஷ்யன் தவறை உணர்ந்தார். நாம் கடவுளுக்கு படைக்கும் உணவை கடவுள் சூட்சமாக எடுத்துக்கொள்கிறார். பின்னர் நாம் அந்த உணவை ஸ்துலாமாக எடுத்துக்கொள்கிறோம். இவ்வளவு தாங்க கடவுள் பிரசத்தத்தின் பின்னால் உள்ள உண்மை. நாம் மனஉருகி கடவுளுக்கு படைக்கும் உணவை கடவுள் சூட்சமமாக எடுத்துக்கொள்வார் என்பதே ஆன்மீகத்தின் நியதி. இதை நாம் நார்த்திகவாதிகளுக்கு புரியவைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

god pray prasatham

god pray prasatham