தெய்வீகம்

துணிக்கடை, நகைகடைகளில் கொடுக்கப்படும் சின்ன அட்டைப்பட கடவுள்களை பூஜை அறையில் வைப்பது நல்லதா? இதன் பின்னாடி இப்படி ஒரு விஷயம் உள்ளதா?

Nov 22 2021 10:16:00 PM

நாம் வாழும் வீட்டில் கண்டிப்பாக பூஜை அறை என்ற ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும். அதுவும் மூடப்பட்ட பூஜை அறை என்றால் இன்னும் சிறப்பு. வாடகை வீட்டில் இருக்கிறோம் என்றால் ரெடிமேடாக விற்கப்படும் கதவு கொண்ட பூஜை அறையை வாங்கி வீட்டில் பொருத்தி பயன்படுத்தலாம். இல்லை எங்களது வீட்டில் அவ்வளவு இடவசதி இல்லை என நினைப்பவர்கள் சுவற்றிலே சாமி படங்களை மாட்டிவைத்துக்கொண்டு ஒரு ஸ்கிரீன் போட்டு மூடிவிடலாம். ஹாலில் எல்லோரும் படுத்துக்கொள்வோம் வீட்டில் போதுமான வசதி இல்லை என்பவர்கள் சமையலறையில் கூட வைத்துக்கொள்ளலாம்.

vastu

எக்காரணம் கொண்டும் உடைந்த படங்களையோ அல்லது சேதமான விக்ரகங்களையோ வீட்டில் வைக்க வேண்டாம். மீறி வைத்தால் நல்லதல்ல. அதேபோல துணிக்கடை, நகை கடை என போகிற வர இடங்களில் கொடுக்கும் சின்ன சின்ன அட்டைகளில் கொடுக்கப்படும் சாமி புகைப்படங்களை வாங்கி வந்து வீட்டில் உள்ள சாமி படத்தில் சொருகி வைப்பது கூடவே கூடாது. ஏனெனில் நீங்க வைத்துள்ள சாமி படம் என்பது தெளிவாக இருக்க வேண்டும். இடையே சேதமோ அல்லது புதிதாக வேறு ஏதாவது போட்டோவோ, இருக்கும் சாமி படத்தை மறைத்து இருக்க கூடாது. ஒருவேளை படம் சேதமாகி இருந்தால் கடையில் கொடுத்து சரிசெய்து கொள்ளுங்கள். இல்லையெனில் ஏதாவது கோவிலில் வைத்து விடுவது நல்லது.

vastu

சாமி படங்களை தெற்கு திசையை தவிர்த்து எந்த திசையிலும் வைக்கலாம். தட்க்ஷிணா மூர்த்தி மற்றும் நடராஜர் பெருமாள் சிலையை மட்டும் தான் தெற்கு திசையில் வைக்க வேண்டும். உங்க வீட்டில் எந்த படம் இருக்கோ இல்லையோ விநாயகர், சரஸ்வதி, லட்சுமி, பெருமாள், முருகர் என ஐவரும் இருக்கும் புகைப்படம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இது இல்லாமல் இஷ்ட தெய்வங்களையும் வைத்து கொள்ளலாம்.

vastu

நீங்க புதிதாக எந்த கடவுளின் படங்களை வாங்கி வந்தாலும், அதை அப்படியே பூஜை அறையில் வைத்துவிட கூடாது. சாமி புகைப்படத்தை வாங்கி வந்த உடனே மஞ்சள், குங்குமம், பூக்கள் போட்டு தினமும் தீபதூபம் காட்டிக்கொண்டே இருக்க வேண்டும். ஆஞ்சநேயர், ஐயப்பன் புகைப்படங்களை வைத்து கொள்வதாக இருந்தால் தனியாக பூஜை அறை கொண்ட வீடு இருக்க வேண்டும். அடுத்து உக்கிர தெய்வங்களை வீட்டில் வைக்க கூடாது என்பார்கள். அது தவறு. உக்கிரம் வர காரணமே தன்னுடைய பக்தரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான். அப்படி இருக்க உக்கிர தெய்வங்களை தாராளமாக வீட்டில் வைக்கலாம். இவை இல்லாமல் குல தெய்வம் புகைப்படங்களை கண்டிப்பாக வீட்டில் வைத்து வணங்க வேண்டும்.

vastu

வீட்டில் வைக்க கூடாது என்ற புகைப்படங்களில் முக்கியமானது சனீஸ்வர பகவான், நவகிரகங்கள், முன்னோர்கள் மற்றும் வாழ்ந்து இ றந்தவர்களின் புகைப்படத்தை சாமி அறையில் வைக்கவே கூடாது. அதுவே முன்னோர்களின் படத்தை பூஜை அறையை தவிர்த்து வேறு எங்காவது தெற்கு திசையை பார்த்தவாறு வைக்கலாம். அடுத்து எந்திரங்களை அறையில் வைத்து பூஜிக்க கூடாது. காய்ந்த பூக்களை கண்டிப்பாக பூஜை அறையில் வைக்க கூடாது. மற்றபடி வேல், சூலாயுதம் வைப்பதாக இருந்தால் அதன் முனையில் கண்டிப்பாக எலுமிச்சை குத்தி வைக்க வேண்டும். மற்றபடி எந்த கடவுளை வீட்டில் வைத்தாலும் அதற்கென நெய் வேதியம், தீபதூப ஆராதனை காட்டுவது என்பது முக்கியமானது.