மக்கள் அனைவரும் பிரச்சனை என்ற ஒன்று வரும்போது மட்டுமே கடவுளை நினைக்கின்றனர். நம் முன்னோர்கள் எப்போதும் தங்கள் வீடுகளில் காலையிலும், மாலையிலும் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தனர். ஆனால் இப்போது செவ்வாய், வெள்ளி போன்ற நாட்களில் கூட விளக்கு ஏற்றி வழிபடுவதில்லை.
பெண்கள் ஏன் விளக்கேற்ற வேண்டும்?
விளக்கு என்பது மஹாலக்ஷ்மியை குறிக்கும். அந்த விளக்கில் எறியும் தீபம் தான் சிவபெருமான். அப்பேற்பட்ட மஹாலட்சுமியை நம் வீடுகளில் உள்ள லட்சுமி கடாச்சமான பெண்கள் ஏற்றினால் தான் நம் வீடுகளில் இன்பம் பொங்கி செல்வம் செழிக்கும். பெண்கள் பொறுமை சாலிகள். தெய்வத்தை உள்ளிருந்து வழிபடக்கூடியவர்கள் .தினமும் காலையிலும் மாலையிலும் விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் நம் குடும்பத்திற்கு எந்த வித இன்னல்களும் வராமல் நம் குடும்பம் சந்தோசமாக வாழ முடியும். செல்வம் செழிக்கும், நம் வீட்டை நோக்கி வரக்கூடிய தீ ய சக்திகளும், நம் பிரச்சனைகளும் நம்மை விட்டு அகலும்.
ஆண்கள் ஏன் விளக்கு ஏற்றக் கூடாது?
ஆண்கள் பொதுவாக நிறைய பகுதிகளுக்கு சென்று வந்து மிகுந்த சோ ர் வி ல் இருக்கக்கூடியவர்கள். பொதுவாக ஆண்கள் அனைவரும் அதிக ஆன்மீக நம்பிக்கை இல்லாதவர்கள். கடவுளை மனமுவந்து வேண்டினாள் வழிபட்டால் மட்டுமே கடவுளின் அருள் நமக்கு கிடைக்கும். வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவுடன் எந்த வித ஈடுபாடுமின்றி விளக்கு ஏற்றினால் எந்த பலனும் நமக்கு கிடைக்காது. இதனால் தான் வீடுகளில் பெண்கள் விளக்கு ஏற்ற வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
நம் முன்னோர்கள் எப்போதும் பக்தியுடன் காலை, மாலை என இரு வேலைகளிலும் விளக்கேற்றி வழிபட்டு வந்ததால் தான் எந்த வித குறையுமின்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். இனியாவது நாம் முடிந்த வரைக்கும் செவ்வாய், வெள்ளி போன்ற தினங்களிலாவது விளக்கேற்றி வழிபடுவோம்.