ஆன்மீகம்

கங்கை ஆற்றில் குளித்த பலனை நம் வீடுகளிலேயே அடைவது எப்படி? ஆன்மீக முறைப்படி குளிப்பது எப்படி?

Feb 18 2021 06:12:00 PM

இந்த நவீன காலத்தில் மக்கள் குளிப்பதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொளவதில்லை. எதோ கடமைக்கு குளித்து முடித்துவிட்டு வேலை வேலை என்று அலைகிறார்கள். நாம் நம்முடைய வீட்டிலேயே கங்கை ஆற்றில் குளித்த புண்ணியத்தை பெற சில வழிமுறைகள் உள்ளன.

bath home gangai river

எந்த திசையை நோக்கி நின்று குளிக்க வேண்டும்?
நாம் எப்போதும் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி நின்று தான் குளிக்க வேண்டும். மேற்கு திசையை நோக்கி நின்று குளித்தால் உடலில் நோ ய் தான் உண்டாகும். க ர் ம ம் செய்த பின்னரும், ம யா ன த் தி ற்கு சென்று வந்த பின்னரும் தான் தெற்கு திசை நோக்கி நின்று குளிக்க வேண்டும்.

bath home gangai river

கங்கை நீர்,
நாம் குளிக்கும் முன்பு ஒரு குவளையில் நீர் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த நீரில் நமது மோதிர விரலால் ஓம் என்று எழுதி ஒரு நிமிடம் தியானம் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் அந்த நீர் கங்கை நீரைப்போன்று புனிதமாகிறது. கங்கை நீரில் குளித்த புண்ணியம் உங்களை வந்து சேரும்.

bath home gangai river

குளிக்கும் போது என்னென்ன வழிமுறைகள் பின்பற்ற வேண்டும்,
நாம் அமைதியாக இருக்க வேண்டிய இடங்களில் ஒன்று நம் குளியல் அறை. நம் உடலில் உஷ்ணம் எப்போதும் கீழிருந்து மேல் நோக்கித்தான் செல்லும். எனவே நாம் குளிக்கும் போது முதலில் கீழிருந்து மேல்நோக்கி நீர் ஊற்ற வேண்டும். கடைசியாகத்தான் தலையில் நீர் ஊற்ற வேண்டும். அப்போது தான் நம் உடலில் உள்ள சூடு குறையும்.

bath home gangai river

அதுபோல் குளித்து முடித்த பின்னர் முதுகைத்தான் முதலில் துவட்ட வேண்டும். நாம் துவட்டும் துண்டு எப்போதும் ஈரத் துணியாக இருக்க வேண்டும். ஏனெனில் உலர்ந்த துணி உஷ்ணம் கொண்டிருப்பதால் தண்ணீரில் நனைத்த துண்டைத் தான் உபயோகப் படுத்த வேண்டும்.

bath home gangai river

ஆறுகளில் குளிக்கும் போது வேகா வேகமாக சென்று குதிக்கக்கூடாது. அங்கே தான் தேவதைகள், நம் முன்னோர்கள் தியானம் செய்துகொண்டிருப்பார்கள். எனவே ஆறுகளில் குளிக்கும்போது மெதுவாக சென்று ஒரு நீரில் இலை விழுவதைப்போன்று இறங்கி குளிக்க வேண்டும்.

bath home gangai river

உப்பு நீரில் குளிப்பதால் நம் க ர் ம ம் குறையும். இந்த ஆன்மீக முறைப்படி நாம் தினமும் குளித்து வந்தால் நமக்கு எந்த நோ ய், நொடிகளும் நெருங்காது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

bath home gangai river