தகவல்கள்

#thoppukaranam: தோப்புக்கரணம் போடுவதால் கரு உருவாவதில் சிக்கல் வருமா? விநாயகர் வழிபாட்டின் ஒரு பகுதியாக வைக்கக்காரணம் என்ன?

Jul 01 2020 10:41:00 AM

"ஹோம்வொர்க் முடிக்கலயா.? கிளாஸ் வெளிய போய், 20 தோப்புக்கரணம் போட்டு வா" என்று கேட்ட நம் காதுகளுக்கு, தோப்புக்கரணம் என்றாலே, தண்டனை என்று தான் நினைக்க தோன்றுகிறது. அதற்கு பின்னால் இத்தனை அறிவியல் இரகசியங்கள் உள்ளது என்பது, இவ்வளவு நாள் சத்தியமா தெரியவில்லை. இதெல்லாம் முன்னரே தெரிந்ததனால் தானோ என்னவோ, நம் முன்னோர்கள் அந்தக்காலத்திலேயே விநாயகர் வழிபாட்டு முறையில், தோப்புக்கரணத்தையும் ஒன்றாக சேர்த்திருக்கின்றனர் என்று உணர முடிகிறது.

exercise benefit work-out

நம்முடைய உடலில் காது மடல்களில் தான் எல்லா உறுப்பையும் இணைக்கிற புள்ளி இருக்கிறதாம். அதனை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடும் போது, நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு சக்தி வெளிப்படுகிறது. தினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் போட்டால், வேறு எந்த பயிற்சியும் செய்யத்தேவையில்லை. அந்த அளவுக்கு பல நன்மைகள் இந்த ஒன்றின் மூலம் கிடைக்கிறது. மூளைக்கு செல்லும் நரம்பு தூண்டப்படுவதில் இருந்து, இதயம் துடிப்பு வரைக்கும் சீராக்கக்கூடியது.

exercise benefit work-out

தோப்புக்கரணப் பயிற்சி செய்யும் போது, மூளையிலுள்ள நரம்புக் கலங்கள் சக்தி பெறுகிறதாம். ஸ்கூல் படிக்கும் போது விநாயகர் சாமியை கும்பிட்டு, தோப்புக்கரணம் போட்டுச்சென்றால், நல்ல மார்க் எடுக்கலாம் என்று சொன்னது, இதனால் கூட இருக்கலாம். நமக்கு எப்பவோ தெரிந்த இந்த இரகசியத்தை, வெளிநாட்டினர் இப்போது தெரிந்துகொண்டு, சூப்பர் பிரெய்ன் யோகா என்ற புது பெயரில் தோப்புக்கரணம் போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

exercise benefit work-out

"நீங்க படிச்ச ஸ்கூல்ல, நாங்க ஹெட்மாஸ்டர்டா" என்கிற மாதிரி, இதையெல்லாம் அன்றைக்கே உணர்ந்த நம் முன்னோர்கள். வழிபாட்டின் ஒரு பகுதியாக மாற்றி, வாழ்க்கை முறையோடு இணைத்து செய்ய வைத்திருக்கின்றனர். இடையில் தோப்புக்கரணம் போட்டால், கரு உருவாவதில் சிக்கல் வரும் என்று ஒரு சிலர் வதந்தி பரப்பிவிட்டுள்ளனர். உண்மையில், தோப்புக்கரணம் போடுவதால், கருப்பையின் சுருங்கி விரியும் திறன் கூடும். அடிவயிற்றினில் ஏற்படும் மிதமான அழுத்தம், இனப்பெருக்க உறுப்புகளுக்கு உகந்ததே. தோப்புக்கரணம் போடுவதால், கரு உருவாவதில் எந்த சிக்கலும் நேராது.