பொதுவாக, மாலையில் வீடுகளில் விளக்கேற்றுவது லக்ஷ்ம் கடாட்சத்தை கொடுக்கும் என்பதை ஐதீகம். அவ்வாறு விளக்கேற்றி கடவுளை வழிபடுவது, கடவுளுடன் நமக்கான தொடர்பை இன்னும் விரிவுபடுத்திகிறது. மனஅமைதி கொடுக்கிறது.
மாலையில் சூரியன் மறையும்போது ஏற்றப்படும் தீபமானது, காலை சூரிய உதயம் வரையில் நமக்கான பலன்களை கொடுப்பதாக கருதப்படுகிறது. அதாவது, விளக்கு வழிபாட்டிற்கு பின்னர் நாம் செய்யும் அல்லது வழுங்கும் பொருட்களின் அடிப்படையில் தான், நமக்கு வருவது சுப பலன்களா இல்லை அசுப பலன்களா என்பது கணக்கிடப்படுகிறது. விளக்கேற்றியவுடன் அப்படி என்ன செய்யக்கூடாது?
அதாவது அரிசி மற்றும் அதனோடு தொடர்புடைய எந்த பொருட்களையும் தானமோ அல்லது இறவாலோ தரக்கூடாது. உதாரணமாக அரிசி அளக்க பயன்படும் படி. அரிசிப்படி என்று கூறுவார்கள் நமது முன்னோர்கள். அரிசியை அளக்க பயன்பட்ட இதை யாருக்காவது இரவல் கொடுக்க நேரிடும்போது நமது வீட்டில் தனியா குறைபாடு வர வாய்ப்பு இருக்கிறதாம்.
அடுத்ததாக உலக்கை. இது நெல் குத்துவதற்கு பயன்படும் பொருள். அடுத்து அரிசி புடைக்க உதவும் முறம். இவை மூன்றையும் யாருக்கும் இரவல் கொடுக்க கூடாது என்கிறார்கள் நமது முன்னோர்கள்.