தகவல்கள்

சாதாரண எறும்பு என்று கடந்துவிட வேண்டாம்! ஏழு ஜென்ம பா வம் நீங்க மனிதர்கள் என்ன செய்ய வேண்டும்?

Apr 24 2021 02:55:00 PM

ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் சொல்லும் விஷயம் இந்த மனித பிறவியை நாம் அடைய கடந்த ஜென்மத்தில் செய்த க ர்ம வி னையே காரணம் என்பது தான். ஜாதகத்திலும், ஆன்மீகத்திலும் நம்பிக்கை கொண்டவர்கள் தாங்கள் செய்த பா வங்களை கழுவ சனிக்கிழமை தோறும் எறும்புக்கு பச்சரிசி மாவு வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

erumbu pachcharisi maavu vinayakar temple

சனிக்கிழமை நாட்களில் பச்சரிசியை எடுத்து அதை மாவு போல அரைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அந்த பச்சரிசி மாவை கையில் வைத்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். பின்னர் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்துக்கு சென்று மரத்தடியில் உள்ள விநாயகரையும், கோவிலில் உள்ள விநாயகரையும் வழிபட வேண்டும். மூன்று முறை விநாயகரை சுற்றி வந்த பின்னர் அந்த பச்சரிசி மாவை கோவிலில் தூவி விட வேண்டும்.

erumbu pachcharisi maavu vinayakar temple

அந்த பச்சரிசி மாவை கண்டிப்பாக எறும்பு வந்து எடுத்துச்செல்லும். ஒரு எறும்பு பச்சரிசி மாவை எடுத்தவுடன் உண்ணாது. அதை சாப்பிட 3 மாதங்கள் எடுத்துக்கொள்ளும். எறும்பின் எச்சில் பட்டவுடன் அந்த பச்சரிசி மாவு இரண்டு வருடம் 3 மாதம் வரை கெட்டுப்போகாது. அதற்குள் எறும்பு அந்த பச்சரிசி மாவை சாப்பிட்டால் ஏழு ஜென்மமாக நாம் செய்த பா வங்கள் அனைத்தும் தீர்ந்து விடும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதற்காகத்தான் சனிக்கிழமை நாட்களில் பச்சரிசி மாவை எறும்பிற்கு உணவாக வைக்கிறார்கள்.

erumbu pachcharisi maavu vinayakar temple