தெய்வீகம்

ஆன்மீகம் : தீராத பிரச்சனைகள் நீங்க துர்கை அம்மனை இவ்வாறு வழிபடுங்கள். உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் பறந்துவிடும்

Jan 22 2021 01:31:00 PM

இந்த உலகில் மனிதர்கள் பிரச்சனை என்றால் மட்டுமே கடவுளை தேடி செல்கிறார்கள். கடவுளே இல்லை என்று கூறுபவர்கள் கூட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளால் கடவுளின் பாதம் நோக்கி செல்கின்றனர். அப்பேற்பட்ட கடவுளை நாம் ஏனோ தானோ என கடமைக்கு கும்பிட்டால் நம்மை சுற்றி உள்ள பிரச்சனைகள் தீராது. முழு பக்தியுடன் கடவுள் சன்னிதானம் சென்றால் மட்டுமே அவர் நம்முடைய குறைகளை போக்குவார்.

durgaiamman lemon pray

குடும்ப பிரச்சனை, சொந்த பந்தங்களுக்குள் உள்ள பகை நீங்க,

பெண்கள் பொதுவாக துர்கை அம்மனுக்கு விரதம் இருப்பதை பார்த்திருப்போம். அந்த துர்கை அம்மனை எவ்வாறு விரதம் இருந்து வழிபட வேண்டும் தெரியுமா? உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்னைகளுக்காகவும், சொந்த பந்தங்களுக்குள் உள்ள தீராத பிரச்சனைகள் நீங்கவும் செவ்வாய் கிழமை விரதம் இருக்க வேண்டும். மாலை சரியாக மூன்று மணி முதல் 4.30 மணி வரையிலான ராகு காலத்தில் துர்கையம்மன் சன்னதிக்கு செல்லவேண்டும். ஒரு எலுமிச்சம்பழத்தை இரண்டாக பிளந்து அதை இரண்டு விளக்கு போல மாற்ற வேண்டும். பின்னர் அந்த எலுமிச்சம்பழ விளக்கில் நெய் ஊற்றி 5 திரிகள் கொண்டு துர்கை அம்மனை நோக்கி ஏற்ற வேண்டும். அப்படி தீபம் ஏற்றும் போது அந்த இரண்டு எலுமிச்சம்பழ விளக்குகளும் நம் கையால் மட்டுமே தீபம் ஏற்றவேண்டும். அடுத்தவர் பற்ற வைத்த விளக்கில் இருந்து நெருப்பு எடுக்கக்கூடாது.

durgaiamman lemon pray

தீராத நோயிலிருந்து விடுபட,

தீராத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் ஞாயிறு கிழமைகளில் அன்று விரதம் இருந்து மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான ராகு காலத்தில் மேற்குறிப்பிட்டவாறு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

durgaiamman lemon pray

பிரார்த்தனைகள் நிறைவேற,

குடும்பம் சம்பந்தமான வேண்டுதல், பிரார்த்தனை நிறைவேற்றம் முதலான வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை விரதம் இருந்து காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகு கால வேளையில் எலுமிச்சம்பழ விளக்கு ஏற்ற வேண்டும்.

durgaiamman lemon pray

அம்மனை வழிபடும் முறை

இந்த பூஜையின் போது அம்மனுக்கு மல்லிகை பூ மற்றும் மஞ்சள் நிற சாமந்தி பூ மட்டுமே வாங்க வேண்டும். அம்மனின் பெயரில் அர்ச்சனை செய்த பின்னர் இந்த விளக்கை ஏற்ற வேண்டும். அம்மனை வழிபட்ட பின்னர் மூன்று முறை அம்மன் சன்னதியை சுற்றி வந்து அம்மன் சன்னதியில் அமர வேண்டும்.

durgaiamman lemon pray

சுமார் 20 நிமிடம் வரை அம்மன் சன்னதியில் அமர்ந்து வேறு எந்த சிந்தனையும் இன்றி அம்மனை நினைத்து துர்கை அம்மன் பாடல்களை துதி பாட வேண்டும். ஆலயத்தை விட்டு வெளியே வந்த பின்னர் வழியில் யாருக்கும் பிச்சை போடக்கூடாது.

durgaiamman lemon pray

வீடு திரும்பிய பின் என்ன செய்ய வேண்டும்?

வீடு திரும்பிய பின்னர் உங்கள் வீட்டில் உள்ள பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி 5 ஊதுபத்திகள் கொளுத்தி கற்பூரம் காட்ட  வேண்டும். வீட்டில் உள்ள விளக்கு அணையும் வரை வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்லக்கூடாது. இத மாதிரியான நேரங்களில் வேறு எந்த வெட்டி கதைகளும் பேசாமல் கடவுளை மட்டும் நினைத்துக்கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு நீங்கள் தொடர்ந்து 9 வாரம் செய்துவந்தால் நீங்கள் என்ன காரணத்துக்காக துர்கையம்மனை வழிபட்டீர்களோ அந்த வேண்டுதல் நினைவேறுமென்பது ஐதீகம்.