தகவல்கள்

வீட்டில் இருக்கும் கதவு எந்த திசையில் இருந்தால் நல்லது? ஒவ்வொரு திசைக்கும் என்ன வேறுபாடு உள்ளது என்று தெரியுமா?

Aug 18 2021 05:01:00 PM

ஒரு தனி மனிதனோ அல்லது ஒரு குடும்பமோ பாதுகாப்பாக தங்க வேண்டும் என்றால் அதற்கு தேவையானது வீடு தான். அப்படிப்பட்ட வீடு வாஸ்து சாஸ்திர முறைகளின் படி சரியாக கட்டப்பட்டால் தான் வீட்டில் இருக்கும் நபரின் வாழ்க்கை செழிக்கும். வீட்டில் முக்கியமான பகுதியாக கருதப்படும் கதவு எந்த திசையில் இருந்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்று இன்றைய பதிவில் காண்போம்.

door-signs door-directions

நீங்கள் வசிக்கும் வீட்டின் கதவு கிழக்கில் இருப்பது மிகவும் சிறப்பானது என்று கூறப்படுகிறது. கிழக்கு திசை எப்போதும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இதற்கு காரணம் சூரிய பகவான். கிழக்கில் சூரியன் உதயமாவதால் உங்கள் வீட்டிற்குள் சூரிய ஒளி நேரடியாக நுழையும். வீட்டில் சூரிய ஒளி நன்றாக விழுவதால் வீட்டிலுள்ள தீ ய சக்திகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகமாகும். கிழக்கு திசை ஆன்மீக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதால் இந்த திசையில் வீட்டின் கதவு இருப்பது நல்லது.

door-signs door-directions

வாஸ்துப்படி வடக்கு திசையானது குபேர திசை என்று அழைக்கப்படுகிறது. எனவே வடக்கில் நமது வீட்டின் பிரதான கதவு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வடக்கு திசையில் கதவு இருக்கும் வீடுகளில் பல நன்மைகள் நடப்பது மட்டுமல்லாமல் அந்த வீட்டில் வசிப்பவர்களின் மனதில் ஆன்மீக சிந்தனைகள் அதிகமாக எழும்.

door-signs door-directions

மேற்கு திசையில் வீட்டின் பிரதான நுழைவு வாயில் இருப்பது அவ்வளவு சிறப்பானது கிடையாது. இந்த மாதிரி வீடுகளில் வசிப்பவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய கால தாமதம் ஏற்படும். அதற்காக அவர்களுக்கு வெற்றியே கிடைக்காது என்று அர்த்தம் அல்ல. எனவே மேற்கு திசையில் கதவு இருந்தால் ஆ பத்து என்று அ ச்சம் கொள்ள வேண்டாம்.

door-signs door-directions

வீட்டின் முக்கியமான கதவு தெற்கில் இருந்தால் அது மிகவும் மோசமானது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திசையில் வீட்டின் பிரதான கதவை வைப்பதால் வீட்டின் உரிமையாளர் மட்டுமல்லாது அதில் குடியிருப்பவருக்கும் தீ ங்கு ஏற்படும். ஒரு சிலருக்கு ம ரண அபாயம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. ம ரணத்தின் வாயில் என்று கருதப்படும் தெற்கு திசையில் இருந்து பித்ருக்கள் வீட்டிற்கு வருவதாக ஒரு கருத்து நடைமுறையில் உள்ளது. எனவே தெற்கு நோக்கிய கதவை வீட்டில் அமைக்க வேண்டாம்.