தகவல்கள்

கனவுக்கும் காக்காவுக்கும் என்ன சம்மந்தம் உள்ளது? காகத்தை கனவில் கண்டால் நமக்கு ஏதேனும் ஆ பத்து வருமா?

Sep 03 2021 03:50:00 PM

கனவு என்பது எல்லோருக்கும் பொதுவானது. நாம் காணும் கனவுக்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. அந்த வகையில் கனவில் காகத்தை காண்பது எப்படிப்பட்ட பலன்களை தரும் என்று இன்றைய கட்டுரையில் பார்க்கலாம். உங்கள் அருகில் காகம் நிற்பது போல் கனவு காண்பது என்பது உங்கள் வாழ்க்கையில் எழும் பிரச்சனைகளை நீங்கள் முறையாக கையாளவில்லை என்பதை குறிக்கிறது.

crow-in-dream

ஒரு காகம் தனியாக நிற்பது போல நீங்கள் கனவு கண்டால், உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் நீங்கள் சில பிரச்சனைகளை சந்திக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். காகங்கள் ஒரு குழுவாக இருப்பதாக நீங்கள் கனவு கண்டால், மிக விரைவில் உங்கள் தோழர்கள் உங்களை ஏமாற்றப் போகிறார்கள் என்று அர்த்தம்.

crow-in-dream

ஒரு காகம் உங்களைத் துரத்துவது போல் நீங்கள் கனவு கண்டால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யக்கூடிய சில தவறான விஷயங்களால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளப் போகிறீர்கள் என்று அர்த்தம். காகங்கள் தொடர்ந்து பறப்பதை போல நீங்கள் கனவு கண்டால், நீங்கள் ஒரு சில இழப்புகளைச் சந்திக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் ஒரு காகத்தை துரத்துவது போல் கனவு கண்டால், நீங்கள் விரைவில் ஏதாவது தவறு செய்து அதன் மூலம் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள் என்பதை இது குறிக்கிறது.

crow-in-dream

காகம் மேல்நோக்கி பறப்பது போல் நீங்கள் கனவு கண்டால், உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என்பதை குறிக்கிறது. காகம் கீழ்நோக்கி பறப்பது போல் கனவு கண்டால், சில விஷயங்களில் உங்களுக்கு துரதிர்ஷ்டங்கள் ஏற்படப்போகிறது என்பதைக் குறிக்கிறது.

crow-in-dream

ஒருவரின் வீட்டை சுற்றி காகங்கள் பறப்பது போல் கனவு கண்டால் அது கெட்ட சகுனமாக பார்க்கப்படும். உங்கள் குடும்பத்தில் ஏதோ வருத்தமான நிகழ்வு ஏற்படப்போவதை இது உணர்த்துகிறது.

crow-in-dream

நீங்கள் ஒரு காகத்தைப் பிடிப்பதை போல கனவு கண்டால் அது விரைவில் நீங்கள் உங்களுடைய பிரச்சனைகளில் இருந்து விடுபடப் போகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. காகம் எதையாவது திருடுவதை உங்கள் கனவில் கண்டால், விரைவில் உங்களுக்கு ஒரு சிறிய விபத்து ஏற்படும் என்று அர்த்தம். இப்படி உங்களுக்கு கனவு வந்தால் நீங்கள் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டும்.

crow-in-dream

காகங்கள் சாப்பிடுவது போல் நீங்கள் கனவு கண்டால் அது ஒரு நல்ல அறிகுறியாகும். இது விரைவில் நடக்கும் முன்னேற்றத்தைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறது. உங்கள் வருமானம் அதிகரித்து வளர்ச்சிப் பாதையில் நீங்கள் செல்வீர்கள் என்பதைக் குறிக்கிறது. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

crow-in-dream

காகங்கள் மரத்தில் கூடு கட்டுவதை போல நீங்கள் கனவு கண்டால் நல்லதல்ல. நீங்கள் தகுதியற்ற ஒருவருக்கு உதவி செய்கிறீர்கள் என்று அர்த்தம். அவர் உங்களுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தப்போகிறார். நீங்கள் ஒருவருக்கு பணம் கொடுக்கிறீர்கள் அல்லது வாங்குகிறீர்கள் என்றால் கவனமாக இருங்கள். இல்லையெனில் உங்களுக்கு பல பிரச்சனைகள் வரலாம்.

crow-in-dream

காகங்கள் அதிகமாக இருக்கும் ஒரு மரத்தை நீங்கள் கனவில் கண்டால், உங்கள் குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு நீங்கள் விரைவான தீர்வைக் கண்டுபிடிக்கப் போகிறீர்கள் என்று அர்த்தம்.

crow-in-dream

மரக் கிளையில் காகங்கள் அமர்ந்திருப்பதை போல நீங்கள் கனவு கண்டால், உங்கள் குடும்பத்தில் எழும் பிரச்சனைகளுக்கு உங்கள் தீர்வை உங்கள் குடும்பம் ஏற்காது. பிரச்சனைகள் அதிகரிக்கும் என்பதை குறிக்கிறது. காகத்தை பயமுறுத்துவதை போல உங்களுக்கு கனவு வருமாயின் உங்களிடமிருக்கும் முக்கியமான பொருள் அல்லது செல்வம் எதையாவது நீங்கள் இழக்கப் போகிறீர்கள் என்று அர்த்தமாகும்.

crow-in-dream

நீங்கள் ஒரு காகத்தைக் கொ லைசெய்வதை போல கனவு கண்டால் அது ஒரு நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. உங்கள் தொழில் மற்றும் வேலைகளில் போட்டியாளர்களை வென்று நீங்கள் பெரிய சாதனையை உருவாக்கப் போகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது.

crow-in-dream

நீங்கள் காகங்களின் கூடுகளை அழிப்பதை போல கனவு கண்டால், நீங்கள் சமீபத்தில் தொடங்கிய ஒரு செயல் திருப்திகரமாக அல்லது வெற்றிகரமாக முடியாது என்று அர்த்தம். உங்கள் கனவில் காயமடைந்த காகத்தை நீங்கள் கண்டால், உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனோ அல்லது உங்களுக்கு நெருக்கமானவர்களுடனோ உள்ள உறவால் உங்களுக்கு பிரச்சினைகள் ஏற்படப் போகிறது என்பதைக் குறிக்கிறது.