காக்கைகள் பற்றி நமக்கு தெரிந்த ஒரே விஷயம் அம்மாவாசை அன்று நாம் காக்கைக்கு உணவு வைக்க வேண்டும். அதை தவிர நாம் அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காக்கைகளும் ஒரு வகையில் நம் உறவினர்கள் தான், காக்கை வடிவில் நம் முன்னோர் வடிவில் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
காக்கைகளின் பழக்க வழக்கங்கள்,
காக்கைகள் பொதுவாக காலை வேளைகளில் கரையும். தான் மட்டும் தனித்து உண்ணாமல் தன் கூட்டத்தினரை வரவழைத்து அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கும். காக்கை உணவு உண்ணும்போது தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று பார்த்துக்கொண்டே இருக்கும். தனியே சென்று தனது இணையுடன் இணையும். தன் இனத்தில் ஏதேனும் ஒரு காக்கை இறந்துவிட்டால் எல்லா காக்கைகளும் ஒன்று சேர்ந்து கரையும், இதுவும் ஒருவகையில் நாம் இ ர ங் க ல் செய்யும் முறையைப் போன்று தான். இப்படி காகம் மனித குணங்கள் அனைத்தையும் தன்னுள் கொண்டுள்ளது. ஆனால் நாம் தான் இதை கண்டுகொள்ளாமல் ஏனோ தானோ என்று சுற்றி திரிகிறோம்.
காக்கையும், ஆன்மீகமும்,
காக்கைக்கு தினமும் உணவு வைப்பது நம் முன்னோர்களுக்கு உணவு கொடுப்பதற்கு சமம். இப்பவும் பிராமிணர்கள் காக்கைக்கு தினமும் உணவு கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு நாம் அனுதினமும் காக்கைக்கு உணவு கொடுப்பதால் நம் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும். செய்வினை கோளாறுகள், தீராத கடன் பிரச்சனை, திருமணம் தள்ளிபோகுதல், வி ப த் து க் க ள் போன்ற எந்த பிரச்சனைகளும் நம்மை நெருங்காது.
காக்கை சனி பகவானின் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பதால் சனி பகவான், விஷ்ணு பகவான், நம் முன்னோர்கள் இவர்கள் அனைவரும் மகிழ்ந்து நமக்கு உதவி புரிவார்கள். நம் முன்னோர்களுக்கே உணவளிக்கும் பாக்கியத்தை காக்கை நமக்கு கொடுக்கிறது. குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்க சுமங்கலிகள் காக்கைக்கு அனுதினமும் உணவளிக்க வேண்டும்.
தினமும் நம் வீட்டிற்கு வந்து காக்கை கரைவது நமக்கு ஒரு நல்ல செய்தியை கொடுக்கும். அதே போல காக்கை காலையில் கரைவது நம் வீட்டிற்கு உறவினர்கள் வருவதன் அடையாளமாக கருதப்படுகிறது. நீங்கள் எவ்வளவு மிகப்பெரிய வேலையில் இருந்தாலும் காக்கை கரைந்தால் உடனே அதற்கு உணவு அளித்துவிடுங்கள்.
எமதர்மன் காக்கை வடிவில் வந்து நம்மை நோட்டமிடுவாராம். அந்த நேரங்களில் காக்கைக்கு நாம் உணவளித்தால் எமதர்மரும் மகிழ்வாராம். ஆன்மீகத்திற்கு அப்பாற்பட்டு காக்கையும் மனிதர்களை நம்பி வாழும் ஒரு உயிரினம். எனவே உங்களுக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் காக்கை என்னும் ஒரு உயிரினத்திற்கு உணவளித்து அந்த இனம் அழியாமல் பாதுகாக்கலாம்.