தெய்வீகம்

குழந்தை வரம் வேண்டுமா? கருவுற்ற பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகணுமா? சென்னையில் உள்ள மஹா பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவோம்.

Feb 16 2021 04:53:00 PM

இந்த உலகில் பெண்ணாக பிறந்தால் மட்டும் பெண்மையை அடைந்துவிட முடியாது. பெண்கள் கருவுற்று தாய்மை நிலையை அடைந்தால் மட்டுமே பெண்மையை அடைய முடியும். நம் மக்கள் நவீன மயமாதல் என்னும் நோக்கில் நகரங்களில் வாழும் மக்கள் இயற்கை பொருட்களை தவிர்த்து பிட்ஸா, பர்கர், ப்ராய்லர் கறி போன்றவற்றை சாப்பிட்டு தங்கள் உடலை தாங்களே கெ டு த் து க் கொள்கின்றனர்.

chennai chrompet amman temple baby

ஆண்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் பெண்களுக்குத்தான் சிறிய வயதிலேயே பூப்படைதல், மா த வி டா ய் கோளாறு, க ரு உருவாதல் த டை படுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதுவும் திருமணம் ஆன பெண்களுக்கு க ரு உருவாகாமல் இருப்பதால் எல்லோரும் கண்டபடி பேசத் தொடங்குவார்கள். இத்தகைய பிரச்சனைகளை நாம் ம ரு த் து வ ரீதியாக கையாண்டாலும் பெரிய அளவில் மாற்றம் கிடைக்குமா என்றால் அது சந்தேகம் தான். சென்னை குரோம்பேட்டை அருகில் அமைந்துள்ளது நாகல்கேணி அம்மன் திருக்கோவில். இந்த ஆலயத்தை தான்தோன்றிய சமயபுரம் முத்துமாரி அம்மன் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.

chennai chrompet amman temple baby

இங்கு உள்ள அம்மன் 18 அடி நீளவாக்கில் பாம்பு புற்றின் மேல் கர்ப்பமாக படுத்திருக்கிறார். சென்னையை சுற்றி உள்ள பகுதிகளில் இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த அம்மன் தாய் கர்ப்பமாக இருந்த நிலையில் வீற்றிருப்பதால் கர்ப்பம் ஆன  பெண்களும்,குழந்தை பாக்கியம் வேண்டும் என்று நினைக்கும் பெண்களும் இங்கே வந்து வழிபடுகிறார்கள்.

chennai chrompet amman temple baby

தோழி ஒருவர் கூட திருமணம் ஆகி 5 வருடங்கள் குழந்தை இல்லாமல் தவித்து வந்தார். பின்னர் இந்த கோவிலின் சிறப்பை பற்றி தெரிந்தவர்கள் கூறியதால் அங்கே சென்று அம்மனை வேண்டி தற்போது குழந்தை வரம் கிடைத்து மகிழ்ச்சியாக இருக்கிறார். குழந்தை வரம் வேண்டும் என்று விரும்புபவர்கள், சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள், ஒரு பெண் குழந்தை உள்ள வீட்டில் இன்னொரு ஆண் குழந்தை வேண்டும் என்று நினைப்பவர்கள் இங்கே வந்து வழிபட்டு செல்கிறார்கள்.

chennai chrompet amman temple baby

அவர்கள் என்ன வரம் வேண்டி வந்தார்களோ அதன் பயன் கூடிய விரைவில் கிடைத்து அனைவரும் மகிழ்ச்சியாய் வாழ்கிறார்கள். நாமும் நம்மை சுற்றி குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகளுக்கு இந்த கோவிலின் மகிமையை எடுத்துக் கூறி அம்மன் வரம் கிடைக்க செய்வோம்.

chennai chrompet amman temple baby