ஆன்மீகம்

நம் ஜாதகத்தை வைத்து வழிபடும் ஆலயம் : ஒரு முறை இந்த ஆலயத்தில் வழிபட்டால் வாழ்க்கையே மாறிவிடும்: திருப்பட்டூர் ப்ரம்மாவின் அதிசயங்கள்

Jan 29 2021 05:20:00 PM

திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்லும் வழியில் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்பட்டூர். இங்கே நம் உலகில் வாழும் உயிரினங்கள் அனைவரையும் படைத்த பிரம்மாவின் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கே பிரம்மனுக்கு என்று 6 அடியில் சிலை ஒன்று மட்டும் தான் உள்ளது. ஆனால் சிவபெருமானுக்கு நிறைய சிலைகள் உள்ளன. அப்படி இருந்தும் ஏன் இந்த கோவில் பிரம்மனின் தளம் என்று கூறப்படுகிறது தெரியுமா?

bramma siva linga thirupattur

தல வரலாறு,
பிரம்மனுக்கு படைக்கும் திறன் கிடைத்ததும், தான் தான் இந்த உலகிலேயே மிகவும் பெரிய சக்தி கொண்டவர் என்ற ஆணவத்தில் இருந்தார். அப்போது சிவபெருமான் அங்கே தோன்றி பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒரு தலையை கிள்ளி பூமியில் தூக்கி எறிந்துவிட்டார். அப்போது அனைத்து சக்திகளையும் இழந்த பிரம்மா பூமிக்கு வந்து தன் தவறை உணர்ந்து சிவபெருமானுக்கு பிரம்மாண்ட வடிவில் சிலைகள் அமைத்து வழிபட தொடங்கினார்.

bramma siva linga thirupattur

பிரம்மனே தன் தவறை உணர்ந்ததால் மீண்டும் பிரம்மனுக்கு படைக்கும் திறனை திரும்ப அளித்தார் சிவபெருமான். இந்த நிகழ்ச்சி நடந்த இடம் தான் இந்த திருப்பட்டூர். இந்த திருப்பட்டூர் பகுதியில் தான் நம்மை படைத்த பிரம்மா சிவனுக்காக பிரம்மாண்ட வடிவில் சிலைகள் அமைத்து வழிபட்டு வந்தார் என்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.

bramma siva linga thirupattur

பிரம்மனை வழிபடுவதால் உண்டாகும் நன்மைகள்,
இங்கே நான்கு முகங்களுடன் பிரம்மாண்டமாக பிரம்மன் அமர்ந்திருக்கும்படி சிலை உள்ளது. நாம் இந்த கோவிலுக்கு செல்லும் முன்பு நம்முடைய ஜாதக புத்தகத்தை எடுத்துக்கொண்டு செல்லவேண்டும். இங்கே இந்த பிரம்மனுக்கு முன்பு நம்முடைய ஜாதகத்தை வைத்து வழிபட்டால் நம் வாழ்க்கையில் நிச்சயம் மாற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமண தடை உள்ளவர்கள், தொழிலில் ந ஷ் ட ம் ஏற்பட்டவர்கள், உறவுகளை பிரிந்தவர்கள் இங்கே வந்து தங்கள் ஜாதகத்தை வைத்து பிரம்மனை மனமுருகி வேண்டினால் வாழ்வில் மாற்றம் உண்டாகும் என்பது இந்த திருத்தலத்தின் வரலாறு.

bramma siva linga thirupattur