ஆன்மீகம்

இரவு நேரத்தில் கோவிலில் உள்ள தெய்வங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் அமானுஷ்யம் நிறைந்த கோவில்!

Jan 07 2022 03:09:00 PM

பீகார் மாநிலத்தில் உள்ள பக்சார் நகத்தில் ராஜராஜேஸ்வரி திரிபுர சுந்தரி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில் காளி, தூமாவதி, பகுளாமுகி, புவனேஸ்வரி என மொத்தம் 8 காளியின் சன்னதிகள் அமைந்துள்ளன. இந்த ஆலயம் மந்திர, தந்திர தாந்திரீக விஷயங்களுக்கு மிகவும் புகழ் பெற்றது.

bihar baksar rajarajeshwari tiripura sundari

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இருந்து தினமும் இந்த ஆலயத்திற்கு வந்து இங்குள்ள காளி தெய்வங்களை பக்தர்கள் வழிபட்ட வண்ணம் உள்ளனர். இரவு நேரங்களில் இங்குள்ள காளி தெய்வங்கள் இரவு நேரத்தில் தங்களுக்குள் பேசிக்கொள்வதாக சொல்கிறார்கள்.

bihar baksar rajarajeshwari tiripura sundari

அதாவது இங்குள்ள 8 காளி தெய்வங்களும் உக்கிர தெய்வங்கள் என்பதால் இரவு நேரத்தில் கருவறைக்கு வெளியே இருந்து சத்தம் கேட்குமாம். இங்குள்ள ஒவ்வொரு தெய்வமும் மற்ற தெய்வங்களுடன் இரவு நேரத்தில் பேசிக்கொள்கின்றனர். இந்த அமானுஷ்ய சம்பவத்தை பார்ப்பதற்காக தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கே கூடுகிறார்கள். எங்கிருந்து இந்த அமானுஷ்ய சத்தங்கள் வருகிறது, எதனால் இப்படி தெய்வங்கள் ஒருவருக்கொருவர் தங்களுடன் பேசிக்கொள்கிறார்கள் என்பதற்கான பதில் இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

bihar baksar rajarajeshwari tiripura sundari