தத்வமஸி

ஐயப்பன் கோவிலுக்கு சென்று திரும்பியவுடன் மது, மாமிசம் சாப்பிடுவது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?

Nov 25 2021 02:00:00 PM

நண்பர் ஒருத்தர் வருஷம் முழுவதும் குடிச்சுக்கிட்டே இருப்பார். மாமிசம் இல்லாமல் அவரால் மதுவை கையில் தொடமுடியாது. வருசத்துல பதினோரு மாசம் எப்பவும் குடியும், கூத்துமாக இருப்பார். ஆனால் இந்த கார்த்திகை மாசம் வந்தவுடன் அவருக்கு திடீரென பக்தி வந்து அய்யப்பனுக்கும், முருகருக்கும் மாலை போட கிளம்பி விடுவார். இத்தனை நாள் குடிச்சுக்கிட்டு திரிஞ்ச மனுஷன் இப்ப என்னடான்னா இப்படி பக்தி மானாக மாறிவிட்டாரே என்று எல்லோரும் நினைக்கும்படி நடந்துகொள்வார்.

ayyappan temple maalai festival

மாலை போட்டு ஐயப்பன் கோவிலுக்கு போயிட்டு வந்தவுடன் தலைவர் நேராக வீட்டுக்கு கூட வராமல் மது அருந்தச் சென்றுவிடுவார். அவர் மட்டும் இல்ல, நாட்டுல சாமிக்கு மாலை போடுற பாதி பேர் இப்படித்தான் இருக்காங்க. இந்த மாதிரி கடவுளுக்கு மாலை போட்டுவிட்டு திரும்பி வந்தவுடனேயே மது அருந்துவதால் நமக்கு எந்த புண்ணியமும் கிடைக்காது.

ayyappan temple maalai festival

மலைக்கு சென்று திரும்பியவுடன் மது மற்றும் மாமிசம் போன்ற பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வீட்டுக்கு வந்து குளித்து முடித்துவிட்டு வழிபாடு செய்யவேண்டும். அதுக்கு அப்புறம் உங்க வீட்டில் உள்ள பிள்ளைகள், மனைவி, உங்களை விட வயதில் சிறிய சகோதரர்களை அழைத்து அவங்க தலையில்  வைத்து ஒரு ஐந்து நிமிடம் ஆசிர்வாதம் செய்ய வேண்டும். இதனால் ஐயப்பனிடம் இருந்து நாம் பெற்ற அருளை நம் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் பெற முடியும்.

ayyappan temple maalai festival