தகவல்கள்

நம் வீட்டில் தெய்வ சக்தி உள்ளதை எப்படி கண்டுபிடிப்பது? தெய்வ சக்தியை நம் வீட்டிற்கு கொண்டு வரும் முறை இதுதான்.

Feb 13 2021 04:50:00 PM

நம் வீட்டில் தெய்வ சக்தி இருந்தால் நமக்கு நல்லது நடக்கும், நம்மை சுற்றி பாசிட்டிவ் எனர்ஜி நிறைந்து காணப்படும். பி ல் லி, சூ னி ய ம், ஏ வ ல் போன்றவை நம்மை நெருங்காது. ஆனால் வீடுகளில் தெய்வ சக்தி குறைந்தால் நம் வாழ்வில் எப்போதும் பிரச்சனை இருந்துகொண்டே இருக்கும்.

[pura anil kuruvi god happy

பொதுவாக நாம் சில வீடுகளில் பார்த்திருப்போம், ஒரு குறிப்பிட்ட வீட்டை சுற்றி மட்டும் அணில், புறா, குருவி போன்ற உயிரினங்கள் சுற்றிக் கொண்டே இருக்கும். பறவைகளுக்கு தெய்வ சக்தி உள்ள இடங்களை கண்டுபிடிக்கும் சக்தி உள்ளது. அதனால் தான் அணில், புறா, குருவி போன்றவை வீடுகளை சுத்திக்கொண்டே இருக்கும்.

[pura anil kuruvi god happy

அதுபோல் நம் வீடுகளிலும் உயிரினங்கள் சுற்றித் திரிந்தால் அவற்றை விரட்டாதீர்கள். அதையும் உங்கள் செல்லப்பிராணி போல நினைத்து வளர்த்துங்கள், அவற்றுக்கு உணவளியுங்கள். அப்படி இந்த உயிரினங்கள் வீடுகளில் சுற்றி வந்தால் அங்கே தெய்வ சக்தி நிறைந்துள்ளது என்று அர்த்தம். கடவுளின் ஆசி உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். மனிதர்களை காட்டிலும் பறவை இனங்களுக்கு ஜீவ சக்தி அதிகம் உள்ளது.

[pura anil kuruvi god happy

பறவை இனங்களை எப்படி உங்கள் வீட்டிற்கு வர வைப்பது?
நாம் புதிதாக வீடுகட்டினாலும் அல்லது ஒரு வீட்டிற்கு வாடகைக்கு சென்றாலும் அந்த வீட்டின் வெளிப்புறம் வாசலில் ஒரு நெற்கதிரை கட்டி தொங்கவிடுங்கள். அதனை தேடி பறவைகள் உங்கள் வீட்டிற்கு வரும். பின்னர் அந்த உணவை உண்டு அங்கேயே தங்கி கூடு கட்டி குஞ்சு பொறிக்கும். இப்படி செய்வதின் மூலம் உங்கள் வீட்டில் உள்ள தெய்வ சக்தியை நீங்கள் மேலும் அதிகப்படுத்தலாம்.

[pura anil kuruvi god happy

[pura anil kuruvi god happy

அதேபோல் பறவைகள் ஏதேனும் உங்கள் வீட்டில் கூடு கட்டி இருந்தால் அந்த கூட்டை ஒரு போதும் கலைத்துவிடாதீர்கள். குருவிக் கூட்டை கலைத்தால் குடும்பம் நிச்சயம் கலைந்துவிடும் என்பது நம் முன்னோர்களால் சொல்லப்பட்ட நியதி. குருவி நம் வீடுகளில் கூடு கட்டினால் நம் வீட்டுக்கு அதிஷ்டம் என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே உங்கள் வீடுகளில் பறவை வளர்ப்பை (புறா, அணில், குருவி) அதிகப்படுத்தி தெய்வ அருளை பெறுங்கள்.

[pura anil kuruvi god happy

[pura anil kuruvi god happy