தகவல்கள்

முன்பைப் போல இப்போது அதிக அளவில் கடவுள் படங்கள் ஏன் திரையரங்குகளில் வெளியாவதில்லை?

Nov 25 2021 12:28:00 PM

தமிழ் சினிமா ஆரம்பமான காலம் முதலே திரையரங்குகளில் கடவுள் பக்தி சம்மந்தமான படங்கள் அதிக அளவில் வெளியாகும். அந்த படங்களுக்கு மக்களின் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளும், கொண்டாட்டங்களும் இருந்துகொண்டே இருக்கும். ஆனால் கடந்த 15 வருடங்களாக கடவுள் பக்தி தொடர்பான எந்த படங்களும் வெளியாவதில்லை.

amman movie relase not theatre

நிறைய அம்மன் படங்கள், சாய் பாபா படங்கள் வெளியாகி பக்தர்களின் வரவேற்பை பெற்றன. சமீப காலத்தில் வெளிவந்த மூக்குத்தி அம்மன் படம் மட்டும் தான் சொல்லிக்கொள்ளும்படி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. மற்ற எந்த படங்களையும் மக்கள் யாரும் விரும்பவும் இல்லை, திரையில் சென்று ரசிக்கவும் இல்லை. முன்னாடி நாட்களில் கடவுள் படம் திரையரங்குகளில் வெளியானால் எல்லோரும் குடும்பத்துடன் சென்று சாமி ஆடி படத்தை கொண்டாடி தீர்ப்பார்கள்.

amman movie relase not theatre

எல்லாத்துக்கும் நம்ம மனசு தான் காரணம். மக்களிடம் பக்தி, கடவுள் மீது நம்பிக்கை இருந்தவரை எல்லோரும் அந்த படங்களை ரசித்தார்கள். இப்போது நவீன காலத்தில் பேய் இருக்குன்னு சொன்னா கூட எல்லாரும் பயந்து நடுங்கி நம்புறாங்க. ஆனால் கடவுள் இருக்குன்னு சொன்னா போய்யா உன் வேலைய பாத்துக்கிட்டு என்று நம்மை கிண்டல் செய்கிறார்கள்.

amman movie relase not theatre

முழுக்க முழுக்க கடவுளை வைத்து படம் எடுக்க யாரும் தயாராக இல்லை. அப்படி படத்தில் கடவுள் சம்மந்தமான காட்சிகள் வந்தாலும் அந்த காட்சியை படத்தின் இறுதி காட்சியில் வைத்து பேயை கடவுள் அழிப்பதை போல காட்டுகிறார்கள். மக்களுக்கு எப்போது மீண்டும் கடவுளின் மீது நம்பிக்கை வந்து முன்னாடி காலங்களை போல கோவிலுக்கு சென்று தினமும் அதிகம் வழிபட ஆரம்பிக்கிறார்களோ அப்போது தான் எல்லோரும் தைரியத்துடன் கடவுள் சம்மந்தமான படங்களை எடுக்க முன்வருவார்கள்.

amman movie relase not theatre