தெய்வீகம்

பக்தர்களின் அச்சம் போக்கும் ஐயப்பன்! குழந்தை பாக்கியம் கிடைக்க, திருமண தடை நீங்க ஐயப்பனை வழிபடுவோம்!

Nov 18 2021 05:26:00 PM

கேரளா மாநிலத்தில் ஐயப்பன் ஸ்வாமிக்கென்று விசேஷமான திருத்தலங்கள் உள்ளன. முருகருக்கு எப்படி ஆறு படை வீடுகள் உள்ளதோ அதே போல அய்யப்பனுக்கு ஐந்து படை வீடுகள் உள்ளது. அச்சன் கோவில் என்னும் ஐயப்பன் சன்னதி அய்யப்பனின் இரண்டாவது படை வீடாக கருதப்படுகிறது. இங்குள்ள ஐயப்பன் மக்களின் அச்சத்தை தீர்த்து அனைவருக்கும் அருள் பொழிவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

achchan kovil ayyapan temple

கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் அச்சன் கோவில் அமைந்துள்ளது. பரசுராமர் இந்த ஐந்து அய்யப்பனின் படைவீடுகளையும் நிறுவியதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மற்ற நான்கு அய்யப்பனின் படை வீடுகளிலும் ஏற்பட்ட நெருப்பு மற்றும் இயற்கை சீற்றங்களால் அங்கு இருந்த அய்யப்பனின் மூலவர் சிலை பாதிப்படைந்து மீண்டும் புது சிலையை வைத்துள்ளனர். ஆனால் இந்த அச்சன் கோவிலில் மட்டும் பரசுராமர் நிறுவிய சிலை தான் இன்று வரை வைக்கப்பட்டுள்ளது. எந்த வித இயற்கை சீற்றத்திலும் பாதிக்கப்படாமல் இன்று வரை அப்படியே உள்ளது.

achchan kovil ayyapan temple

பல வருடங்களுக்கு முன்னர் ஒரு வயதான முதியவர் ஒருவர் அச்சன் கோவில் அய்யப்பனை வழிபட தன் சொந்த ஊரில் இருந்து வந்துகொண்டிருந்தார். அப்போது இரவு நேரத்தில் ஒரு காட்டுப் பகுதியில் மாட்டிக்கொண்டார். எப்படி இந்த இடத்தை விட்டு அச்சன் கோவிலுக்கு செல்வது என்று அவருக்கு தெரியவில்லை. அப்போது ஒரு அசரிரீ ஒலித்தது. இந்த வாள் அய்யப்பனான என்னுடைய வாள், இந்த வாளை பின்தொடர்ந்து சென்றால் நீ ஐயப்பன் கோவிலை அடைந்துவிடலாம்.

achchan kovil ayyapan temple

அங்கு சென்றவுடன் ஆலயத்தில் இந்த வாளை ஒப்படைத்துவிடு என்று சொல்லியது. அந்த அய்யப்பனின் குரலை கேட்ட அந்த முதியவர் அந்த வாளை பின்தொடர்ந்து வாளின் வெளிச்சத்தில் கோவிலுக்கு சென்றுவிட்டார். அங்கு சென்று இந்த வாள் அய்யப்பனின் வாள், இதை அவர் சமஸ்தானத்தில் வைத்துவிடுங்கள் என்று சொல்லியுள்ளார். அவர் சொன்னதை யாரும் நம்பவில்லை. அப்போது மீண்டும் ஒரு அசரிரீ ஒலித்து என்னுடைய வாளை என் சிலைக்கு அருகில் வைத்துவிடுங்கள் என்று சொல்லியது.

achchan kovil ayyapan temple

அந்த அய்யப்பனின் குரல் சொன்னதைப்போலவே இன்றுவரை அந்த வாளை அய்யப்பனின் அருகில் வைத்து வழிபடுகிறார்கள். பூர்ணா மற்றும் புஷ்கலை என்னும் இரு தேவிகளிடன் அய்யப்பன் அழகாக அரசர் தோற்றத்தில் காட்சி தருகிறார். இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால் வாழ்க்கையில் பயந்த சுவாகம் கொண்டவர்கள் வாழ்க்கை மாறிவிடும் என்னும் கருத்து நிலவுகிறது. அதேபோல திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து அய்யப்பனின் அருளை பெறுகிறார்கள். இந்த கோவிலில் ஆண்கள் பெண்கள் என அனைவருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

achchan kovil ayyapan temple