ஆன்மீகம்

தினமும் இந்த நாலுவரி பதிகத்தை அபிராமி முன்னிலையில் பாடுங்கள்! ஐந்துவருடத்தில் முடிய வேண்டிய கடனை இரண்டே வருடத்தில் கட்டிவிடலாம்!

Nov 30 2021 07:42:00 PM

இன்று பேங்க் அக்கவுண்டில் பணம் இல்லாதவர்களை கூட பார்த்துவிடலாம். ஆனால் ஏதாவது ஒரு பேங்கில் லோன் இல்லாதவர்களை பார்க்க முடியாது. ஏனெனில் இன்றைய காலத்தில் வீடு கட்டுவது, இடம் வாங்குவது என எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் பேங்கில் லோன் வாங்கி விடுகிறார்கள். வாழ்க்கை முழுக்க EMI கட்டுவதற்காக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். எதிர்காலத்திற்கு போதுமான சொத்து சேர்த்துவதை விடுத்து மூச்சை முட்டும் அளவிற்கு சொத்தை சேர்த்த முயல்கிறார்கள். இளமை காலத்தை வாழாமல் தொலைத்துவிட்டு, எதிர்காலத்திற்கு சொத்து சேர்த்து என்ன பயனோ? 

kula-deivam-valipadu abirami-anthathi

சிலர் வீடு கட்ட வேண்டும் என கட்டிவிடுகிறார்கள். ஆனால் பேங்கிற்கு வட்டி கட்டியே பாதி ஆயுசே முடிந்துவிடுகிறது. ஐந்து வருடம் ஆனாலும் அசல் அப்படியே இருப்பது போல தான் தெரியும். ஏனெனில் நாம் மாதாமாதம் கொடுக்கும் EMI 75% வட்டிக்கே போகும்போது, எங்கு போய் அசல் குறைய போகிறது? இதற்கு என்ன தான் வழி? சம்பள உயர்வு ஏதாவது அல்லது புது வேலை கிடைக்கபெற்று ஊதிய உயர்வு கிடைத்தால் மட்டுமே இதற்கு தீர்வு. கையில் காசு இருக்கும்போதெல்லாம் காசை கட்டி கடனை குறைத்துவிடலாம். 

kula-deivam-valipadu abirami-anthathi

இப்படி ஏதாவது ஒருவழியில் கடன் குறைய வேண்டும் இல்லையா? ஆனால் அப்படி எதுவும் வழி கிடைக்கவில்லை என்றால், ஆண்டவனிடம் தானே கேட்டு நிற்க வேண்டும்? தீராத கடனும் தீரும் சில அந்தாதிகளை தினமும் இறைவன் முன்னிலையில் பாராயணம் செய்யும்போது, மன அமைதி பெற்று உங்களது கடன் தொல்லைக்கு வழி பிறக்கும் என்கிறார்கள் முன்னோர்கள். அப்படித்தான் அபிராமி அந்தாதியில் உள்ள 54வது பதியத்தை மனமுறுகி வேண்டும்போது, உங்களது கடன் தொல்லை ஏதாவது ஒரு வகையில் நிவர்த்தி ஆகும் என்பது நம்பிக்கை. இதனால் பலன் கண்டவர்களும் உண்டு. அந்த பதிகத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

kula-deivam-valipadu abirami-anthathi

'இல்லாமை சொல்லி ஒருவர்தம் பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
சொல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே!'