தகவல்கள்

அறிவியல் விஞ்ஞானிகளை ஆச்சர்யத்தில் உறையவைத்த ஆன்மீக நிகழ்வுகள்! இது எல்லாம் எப்புடி நடக்குது என்று விழிபிதுங்கி நிற்கும் அறிஞர்கள்!

Nov 25 2021 11:12:00 AM

நம்ம உலகம் என்னதான் அறிவியல் ரீதியாக பல வகையான முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும் ஆன்மீகத்திலும், சில ஆலயங்களிலும் நடக்கும் விசித்திரமான விஷயங்களுக்கு எந்த அறிவியல் ஆய்வாளர்களாலும் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை. எவ்வளவோ ஆராய்ச்சி செய்தாலும் இதெல்லாம் எப்படி நடக்குது என்று எவ்வளவு பெரிய விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

aanmega incident happen temple

நம்ம நாட்டில் நடக்கும் சில ஆன்மீக சம்பவங்களை பற்றி இங்கு பார்க்கலாம். திருச்செந்தூர் சூரசம்காரத்துக்காக வேலை எடுத்துச் செல்லும்போது அந்த நேரத்தில் வானத்தில் கருடன் பறக்கும். சபரிமலையில் திருவாபரண பெட்டி மிகவும் பிரபலமானது. அந்த பெட்டி சபரிமலையை ஏறும்போதும் வானில் கருடன் பறக்கிறது. பழனியில் சூரசம்ஹாரம் நடக்கும்போது பழனி மலை முருகனின் வேலை மலையில் இருந்து கீழே எடுத்துச் செல்லும்போது ஒவ்வொரு வருடமும் கருடன் பறக்குது.

aanmega incident happen temple

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்தின் குடமுழுக்கு விழாவின் போது கருடன் ஆகாயத்தில் வட்டமிடுவதை பார்த்திருப்போம். மைசூர் தசராவில் ஒவ்வொரு முறை சாமுசேஸ்வரி உலா வரும்போதும் மழை பெய்யும். வருடந்தோறும் மதுரையில் கள்ளழலகர் ஆற்றில் இறங்கும்போது நிச்சயம் மழை பெய்யும். முறையாக ஆன்மீக விதிப்படி கும்பாபிஷேகம் செய்யும் எல்லா ஆலயங்களிலும் கும்பாபிஷேக விழாவின்போது கருடன் வானத்தில் வட்டமிடும். அது எவ்வளவு சின்ன கோவிலாக இருந்தாலும் சரி.

aanmega incident happen temple

இன்னும் எத்தனையோ ஆலயங்களில் இதுமாதிரி தினமும் அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இதுக்கெல்லாம் என்ன காரணம் எதன் அடிப்படையில் இதெல்லாம் நடக்குது என்று இன்றுவரை யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. கடவுளின் அருளை சந்தேகிக்கும் நபர்கள் முதலில் இந்த சம்பவங்களுக்கான விளக்கம் கொடுத்தால் நல்லா இருக்கும்.

aanmega incident happen temple