நம்மில் ஒருசிலர் ஆண்டவன் என்ன சோதனை கொடுத்தாலும், நடப்பதெல்லாம் நன்மைக்கே என பாஸிட்டிவாகவே எடுத்துக்கொண்டு போவார்கள். நடந்து முடிந்த விஷயம் நமக்கு சாதகமாக இல்லையெனினும், வருத்தப்பட்டு எந்த பயனும் இல்லை என்பதை புரிந்து கொண்டு, அடுத்த அடியை நோக்கி நகர்வார்கள். ஒருசிலர் நடந்து முடிந்ததை நினைத்துக்கொண்டு அதே இடத்திலே உட்கார்ந்து விடுவார்கள். எதிர்மறை எண்ணங்கள் நம்மை அடுத்த அடியை நோக்கி நகர விடாமல் ஒரே இடத்தில் தேங்க வைத்துவிடுகிறது. இந்த எண்ணத்தை தவிர்த்து, நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
வீட்டில் எல்லா பக்கமும் வெளிச்சம் வரும்படி விளக்குகளை வைக்க வேண்டும். முடிந்தவரை அந்த விளக்கை நோக்கி, மனதில் உள்ள இலக்கை வேண்டினால் அந்த எண்ணங்கள் உறுதியாகி, கனவு மெய்ப்படும். எண்ணங்கள் உறுதியானால், அது ஒருநாள் நடக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். பொழுது சாய்ந்ததும் வீடுகளில் விளக்கேற்றி, கடவுளை பிராத்திக்க சொன்னதும் இதற்காக கூட இருக்கலாம்.
வீட்டில் வளரக்கூடிய மூங்கில் மரங்கள் அல்லது போன்சாய் மரவகைகளை அடுக்கடி கண்ணில் படும் இடத்தில் வளர்ப்பதும் எண்ணங்களை உறுதியாக்குமாம். இதைத்தவிர பூந்தொட்டிகள் வளர்ப்பதும் மனதிற்க்கு இதமான மகிழ்ச்சியான சூழலை தரும். வீட்டில் நல்ல மணம் தரக்கூடிய மணமூட்டிகளை பயன்படுத்தலாம். இது சூழலை புத்துணர்வு மிக்கதாக மாற்றும். கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் தூபம் போடலாம்.
அடுத்து செல்லப்பிராணிகள். சிலர் நாய் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதுவும் மனதின் பாரத்தை குறைத்து, லேசாக உணரவைக்கும். இதற்கு பதிலாக, பூனை வளர்த்தால் பலத்த மாறுதல் கண்டிப்பாக ஏற்படும். என்ன மந்திரமோ தெரியாது. ஒருவாரத்திலே, நல்ல பலன் கண்டுள்ளதாக நண்பர் கூற, அவரது அனுபவத்தை பகிர்ந்தேன். மேற்க்கண்டவைகளை செய்யும் போது நமது சூழல் வெளிச்சமாக, வண்ண பூக்களால் புன்னகையுடன், செல்லப்பிராணிகளால் கலகலப்பாக இருக்கும்போது வருத்தப்பட கூடிய நிகழ்வுகள் நடந்தாலும், நம்மால் எளிதில் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். நாளடைவில் நேர்மறை எண்ணங்கள் கொண்ட மனிதராக பிறக்கலாம்.