ஆன்மீகத்தில் முக்கிய இடம் பெறும் தாமரைப்பூ சேற்றிலும் மலரும் தன்மை கொண்டது. இதனாலே, தான் உள்ள இடத்திற்கும் ஆளுக்கும் சமந்தம் இல்லாத மனிதர்களை சேற்றில் பூத்த செந்தாமரை என்கிறோம். பக்தியானது எப்படிப்பட்ட மனிதரிடத்தும் மலர கூடும் என்ற மறைமுக பொருள் உணர்த்தும் தாமரைப்பூவிற்கு ஆன்மீகத்தில் அத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த ஆயிரம் இதழ்களை கொண்ட தாமரை பூ பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இதிகாசத்தில் வரும் இந்திரலோகத்தில் இடம் பெற்றிருக்கும் முக்கியமலர். புத்தர் கதைகளில் வரும் வானுலகத்தில் இம்மலர் இருப்பதாகவும் இந்திரனது மகள் மாயாதேவிக்கு பிடித்த மலராக உள்ளதால் ஆயிரம் இதழ்களோடு படைக்கப்பட்டதாகவும் ஒரு கதை உண்டு.
historical events
#ThousandPetalLotus: உண்மையில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப்பூ உள்ளதா என தேடிய போது, இணையத்தில் கிடைத்த காணொளி. இந்த தாமரை ஆயிரம் இதழ் கொண்டதாக கூறப்படுகிறது. உண்மையில் ஆயிரம் இதழ் கொண்ட மலர் இருக்காது. அப்படி இருந்தால் அது வானுலகத்தில் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. சந்தேகம் ஏற்பட்டு எண்ணிப்பார்த்தால், கண்டிப்பாக ஆயிரம் இதழ்களுக்கு குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது.